64 MP கேமராவுடன் பல அம்சமான அம்சங்கள் கொண்ட ரியல்மீ 7, 7 ப்ரோ வெளியாகும் தேதி உறுதியானது!

19 August 2020, 10:18 am
Realme 7, 7 Pro With 64MP Camera To Launch On September 1
Quick Share

புதிய ஸ்மார்ட்போன்களைக் கொண்டுவருவதில் ரியல்மீ மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது, மேலும் இது மீண்டும் சீனாவில் ஒரு புதிய தொடர் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ரியல்மீ வரவிருக்கும் ஸ்மார்ட்போன் தொடரைக் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை, ஆனால் அதன் CMO வெய்போ வழியாக அறிமுகத்திற்கான முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளார்.

CMO உண்மையில் ஒரு சோடா கேனின் படத்தை வெளியிட்டுள்ளார், அதில் ஏழு என்ற எண் எழுதப்பட்டுள்ளது, அதோடு விரைவில் புதியது என்று ஒரு தலைப்பும் உள்ளது. இதன் பொருள் நிறுவனம் விரைவில் ஒரு புதிய தொடர் சாதனங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது என்பது தெரிகிறது.

ரியல்மீ 7 தொடர் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்

ஸ்மார்ட்போன் தொடரில் ரியல்மீ 7 மற்றும் ரியல்மீ 7 புரோ ஆகிய இரண்டு தயாரிப்புகள் உள்ளன. ஸ்மார்ட்போன்கள் முறையே 4,300 mAh மற்றும் 4,500 mAh பேட்டரிகளைக் கொண்டிருக்கும். மேலும், சாதனங்களில் 65W வேகமான சார்ஜிங் வசதி இருக்கும். நிறுவனம் இந்த சாதனங்களை செப்டம்பர் 1, 2020 அன்று அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மீ 7 சீரிஸைக் கொண்டுவருவதைத் தவிர, ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் மேலும் இரண்டு கைபேசிகளைக் கொண்டு வர வாய்ப்புள்ளது. ரியல்மீ 8 மற்றும் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65W பேட்டரி இருக்கும். 

இதேபோல், வரவிருக்கும் சாதனங்களில் 6.43 அங்குல முழு HD+ டிஸ்பிளே உடன் 1080×2400 பிக்சல்கள் ரெசொலூஷன் மற்றும் ஆக்டா கோர் செயலி இருக்கும் என்று TENAA பட்டியல் தெரிவிக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 8 ஜிபி ரேம் மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பு இருக்கும். அவை பின்புறத்தில் 64 MP முதன்மை சென்சார் மற்றும் முன்பக்கத்தில் 32 MP கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

ரியல்மீ C12 மற்றும் ரியல்மீ C15 அறிமுகம்

இதற்கிடையில், ரியல்மீ C12 மற்றும் ரியல்மீ C15 எனப்படும் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.8, 999 மற்றும் ரூ.9,999 விலைக்கொண்டுள்ளது. ரியல்மீ C12 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது, மற்ற ஸ்மார்ட்போனில் இரண்டு வகைகள் உள்ளன, அதாவது 3 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி வகைகள் இருக்கும். மேலும், இரண்டு சாதனங்களும் பவர் ப்ளூ மற்றும் பவர் சில்வர் போன்ற இரண்டு வண்ண வகைகளில் இருக்கும். ஸ்மார்ட்போன்கள் 2020 ஆகஸ்ட் 27 முதல் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மற்றும் realme.com தளத்தில் கிடைக்கும்.

Views: - 0

0

0