செம வேகமான சார்ஜிங் வசதி கொண்ட ரியல்மீ 7, ரியல்மீ 7 ப்ரோ விரைவில் இந்தியாவில் அறிமுகம் | எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் இங்கே

27 August 2020, 5:25 pm
Realme 7, Realme 7 Pro to launch in India on September 3
Quick Share

ரியல்மீ தனது சமீபத்திய ரியல்மீ 7 தொடரை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் தொடர் செப்டம்பர் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை இந்த பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது.

புதிய தொடரில் ரியல்மீ 7 மற்றும் ரியல்மீ 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அடங்கும் என்பதையும் இந்த பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தொடர் 65W சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் தீர்வோடு வரும் என்பதையும் டீஸர் படம் உறுதிப்படுத்துகிறது. ரியல்மீ 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் மற்றும் realme.com ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்கும் என்பதையும் இந்த பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது

மேலும், இந்தத் தொடர் 64 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்பையும் கொண்டிருக்கும். ரியல்மீ 7 ப்ரோ இந்தியாவில் வேகமாக சார்ஜ் செய்யும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் என்று பிராண்ட் கூறுகிறது.

இது வெறும் 34 நிமிடங்களில் 0 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ்  செய்ய உதவும். மேலும், 3 நிமிடம் சார்ஜ் செய்தால் 3.5 மணிநேர அழைப்பு, 2.5 மணிநேர திரைப்படம், 13.2 மணிநேர இசை மற்றும் PUBG மொபைலில் 3 சுற்றுகளை விலையாடும் அளவுக்கு நேரம் வழங்கும்.

இதற்கிடையில், நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரவிருக்கும் ரியல்மீ 7 தொடருக்கான ஆர்டர்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. ஒருவர் ரூ.1,000 செலுத்துவதன் மூலம் முன்பதிவு செய்யலாம் மற்றும் பயனருக்கு முன்கூட்டியே தொலைபேசி வாங்க 100 சதவீதம் வாய்ப்பு கிடைக்கும், மீதமுள்ள தொகையை செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 15 க்குள் செலுத்தலாம். ரியல்மீ 7 பிளைண்ட் ஆர்டர் பயனர்களுக்கு ரியல்மீ AIoT தயாரிப்புகளுக்கு ரூ.100 தள்ளுபடி மற்றும் ரியல்மீ 7 புரோ பிளைண்ட் ஆர்டர் பயனர்களுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை

தொலைபேசிகளுக்கு தள்ளுபடி கூப்பன்களையும் வழங்கும்.

Views: - 1

0

0