இந்தியாவில் ரியல்மீ பட்ஸ் ஏர் 2 விற்பனைக்கு வரும் தேதி இதுதான்? விலை & விவரங்கள்

1 March 2021, 5:50 pm
Realme Buds Air 2 to Go on Sale for the First Time in India
Quick Share

ரியல்மீ பட்ஸ் ஏர் 2 TWS இயர்பட்ஸ் இந்தியாவில் முதல் முறையாக மார்ச் 2 ஆம் தேதி விற்பனைக்கு வரும் ன்று  தகவல்  வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. சீன தொழில்நுட்ப நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் இந்த புதிய TWS பட்ஸ் ரியல்மீ  நிறுவனத்திலிருந்து 2019 டிசம்பரில் வெளியான ரியல்மீ பட்ஸ் ஏர் மாடலிலிருந்து மிகவும் வேறுபட்டது.

ஆனால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ரியல்மீ பட்ஸ் ஏர் புரோவைப் போலவே இருக்கின்றது. அவை செயலில் சத்தம் ரத்துசெய்தல் (ANC) மற்றும் 10 மிமீ ஆடியோ டிரைவர்களைக் கொண்டுள்ளன. ரியல்மீ பட்ஸ் ஏர் 2 ஆனது 25 மணிநேர பேட்டரி ஆயுள் மற்றும் ஸ்மார்ட் டிடெக்ஷன் அம்சத்தைக் கொண்டுள்ளது.

விலையைப் பொறுத்தவரை, ரியல்மீ பட்ஸ் ஏர் 2 ரூ.3,299 விலையைக் கொண்டுள்ளது, இது ANC அம்சத்தை ஆதரித்தாலும் பட்ஜெட் TWS பிரிவில் உள்ளது. ஃபிளிப்கார்ட் அல்லது ரியல்மீ ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்ஸ் வழியாக வாடிக்கையாளர்கள் வெள்ளை அல்லது கருப்பு வண்ண விருப்பங்களுக்கு இந்த இயர்பட்ஸைத் தேர்வு செய்யலாம். 

பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் ரூ.285 வரை மதிப்புள்ள பரிவர்த்தனை சலுகை, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக், பாங்க் ஆஃப் பரோடா மாஸ்டர்கார்டு டெபிட் கார்டில் 10 சதவீதம் தள்ளுபடி, மற்றும் மாதத்திற்கு ரூ.113 EMI கட்டணம் செலுத்தும் முறை போன்றவற்றையும் ரியல்மீ வழங்குகிறது கூடுதலாக, வாடிக்கையாளர்கள் ஆறு மாத இலவச ஸ்பாட்டிஃபை பிரீமியம் சந்தாவையும் அனுபவிக்க முடியும்.

Views: - 7

0

0