மிக குறைந்த விலையில் ரியல்மீ C11 (2021) ஸ்மார்ட்போன் அறிமுகம் | விவரங்கள் இங்கே

5 May 2021, 5:46 pm
Realme C11 (2021) arrives with 8MP rear camera, 2GB RAM and more
Quick Share

ரியல்மீ நிறுவனம் புதிய ரியல்மீ C11 (2021) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது ரஷ்யா மற்றும் பிலிப்பைன்ஸில் இ-காமர்ஸ் தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. ரியல்மீ C11 இன் புதிய 2021 மாடல் 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் முந்தைய மாடல் உடன் ஒப்பிடும்போது மாறுபட்ட விவரக்குறிப்புகளுடன் வருகிறது.

ரியல்மீ நிறுவனத்தின் ரஷ்ய மற்றும் பிலிப்பைன்ஸ் வலைத்தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் இன்னும் பட்டியலிடப்படவில்லை என்றாலும், ரியல்மீ C11 (2021) ஏற்கனவே ரஷ்யாவில் அலிஎக்ஸ்பிரஸ் மற்றும் பிலிப்பைன்ஸில் லாசாடா போன்ற இ-காமர்ஸ் தளங்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது. பிலிப்பைன்ஸில், தொலைபேசியின் விலை இப்போது 2 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு விருப்பத்திற்கு PHP 4990 (தோராயமாக ரூ.7,600) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அயர்ன் கிரே மற்றும் லேக் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ரியல்மீ C11 (2021) விவரக்குறிப்புகள்

ரியல்மீ C11 6.5 அங்குல HD+ LCD பேனலை 720 x 1600 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போனுக்கான செயலி விவரங்கள் குறித்து இன்னும் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை, இது UNISOC SC9863 SoC மூலம் ஆற்றல் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது மைக்ரோ SD கார்டின் உதவியுடன் மேலும் விரிவாக்கலாம்.

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் ஒரே ஒரு 8 MP கேமரா மற்றும் LED ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதனுடன் 5 MP செல்பி கேமரா முன்பக்கத்தில் இருக்கும். சாதனத்தின் பின்புறத்தில் ஒற்றை மோனோ ஸ்பீக்கர் கிரில் ஆகியவை இடம்பெறும்.

ரியல்மீ C20 ஆனது 5000 mAh பேட்டரி உடன் ஆதரிக்கப்படுகிறது, இது மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உடன் 10 W வேகத்தில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. அத்துடன் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் மைக் ஆகியவையும் இடம் பெறும். இணைப்பு விருப்பங்களில் வைஃபை, புளூடூத், 4 ஜி, GPS மற்றும் பல அம்சங்கள் இருக்கும். ரியல்மீ UI 2.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 உடன் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும்.

Views: - 226

0

0