ரியல்மீ C25s அறிமுகமான 2 வாரங்களில் ரியல்மீ ரசிகர்களுக்கு செம ஷாக்!

23 June 2021, 2:19 pm
Realme C25s price hiked in India just after 2 weeks of launch
Quick Share

ரியல்மீ இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் C தொடரில் ரியல்மீ C25s என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள், தொலைபேசியின் விலை ரூ.500 அதிகரித்துள்ளது. புதிய அதிகரிக்கப்பட்ட விலையில் இப்போது ரியல்மீ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த திருத்தத்தைத் தொடர்ந்து, ரியல்மீ C25s போனின் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.10,499 ஆகவும், 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.11,499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி வகைகளில் முறையே ரூ.9,999 மற்றும் ரூ.10,999 விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரியல்மீ C25s விவரக்குறிப்புகள்

ரியல்மீ C25s 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே 720 x 1600 பிக்சல்கள் ரெசல்யூஷன், 60 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 570 நைட்ஸ் உச்ச பிரகாசத்தைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 8 மெகாபிக்சல் கேமராவைக் ஒரு வாட்டர் டிராப் நாட்ச் பகுதியில் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றின் கலவையுடன் சதுர வடிவ டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

ரியல்மீ C25s மீடியாடெக் ஹீலியோ G85 SoC உடன் இயக்கப்படுகிறது, இது 4 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் மைக்ரோ SD கார்டு வழியாக ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.

பேட்டரியைப் பொறுத்தவரை, இது 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 6,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ரியல்மீ UI 2.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 OS உடன் இயங்குகிறது. தொலைபேசி பின் பேனலில் கைரேகை சென்சார் உள்ளது.

Views: - 190

0

0