புளுடூத் ஸ்பீக்கர் வாங்க பிளான் பண்ணிருக்கீங்களா? இந்த ரியல்மீ கோபிள் ஸ்பீக்கர் பற்றி தெரியுமா

4 May 2021, 6:24 pm
Realme Cobble Bluetooth Speaker launched with 9 hours of playback time, IPX5 rating and more
Quick Share

ரியல்மீ மலேசியாவில் ரியல்மீ கோபில் (Realme Cobble) என்ற புதிய புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ரியல்மீ கோபிள் புளூடூத் ஸ்பீக்கரின் விலை MYR 99 (தோராயமாக ரூ.1,800) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மெட்டல் பிளாக் மற்றும் எலக்ட்ரிக் ப்ளூ வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கர் மற்ற சந்தைகளிலும் கிடைக்குமா இல்லையா என்பது குறித்து ரியல்மீ எந்த தகவலையும் வழங்கவில்லை

சரி, இப்போது இந்த ரியல்மீ கோபிள் புளூடூத் ஸ்பீக்கரில் என்னென்ன அம்சங்கள் இருக்குனு தெரிஞ்சுக்கலாம்.

ரியல்மீ கோபிள் புளூடூத் ஸ்பீக்கர் என்பது வட்ட வடிவிலான ஸ்பீக்கர் ஆகும், இது இருளில் ஒளிரும் அம்சத்துடன் வருகிறது. 5W டைனமிக் பாஸ் பூஸ்ட் டிரைவர் உடன் ஆடியோ தரம் சிறப்பாக இருக்கும், இது ஆழமான பாஸ் மற்றும் 5W ஒலி வெளியீட்டை செயல்படுத்த ஒரு செயலற்ற பாஸ் ரேடியேட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், இது ஒரு Game Mode உடன் வருகிறது, இது 88 ms வரை குறைந்த லேட்டன்சியை வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்பீக்கர் ஸ்டீரியோ இணைப்பையும் கொண்டுள்ளது மற்றும் பாஸ், டைனமிக் மற்றும் பிரைட் உள்ளிட்ட மூன்று Equalizer presets உடன் வருகிறது. இந்த ஸ்பீக்கர் IPX5 சான்றிதழ் உடன் நீர் எதிர்ப்பு திறனைக் கொண்டுள்ளது.

ஸ்பீக்கர் புளூடூத் 5.0 வழியாக மற்ற சாதனங்களுடன் இணைகிறது மற்றும் 1,500 mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது, இது 9 மணிநேர பிளேபேக் நேரத்தை ஒரே சார்ஜிங் உடன் வழங்குவதாகக் கூறப்படுகிறது. 

ரியல்மீ நிறுவனம் வழங்கும் தகவலின்படி, இந்த ஸ்பீக்கர் முழுமையாக சார்ஜ் ஆக 2.5 மணிநேரம் ஆகும். புளூடூத் ஸ்பீக்கரின் பல்வேறு அம்சங்களை Android இல் மட்டுமே கிடைக்கும் Realme Link ஆப் மூலம் கட்டுப்படுத்தலாம், iOS இல் இந்த ஆப் இல்லை.

Views: - 59

0

0

Leave a Reply