ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் ரியல்மீ GT 5ஜி வெளியாகும் தேதி இதுதான்!

18 February 2021, 4:59 pm
Realme GT 5G with Snapdragon 888 to launch on March 4
Quick Share

ரியல்மீ தனது வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ரியல்மீ GT 5ஜி போனின் அறிமுக தேதியை அறிவித்துள்ளது. இது ரியல்மீ ரேஸ் என்ற குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும், இது நிறுவனத்தின் முதல் ஸ்னாப்டிராகன் 888 இயங்கும் ஸ்மார்ட்போன் ஆகும்.

ரியல்மீ GT 5ஜி மார்ச் 4 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மீ VP சூ Qi சேஸ் அறிவித்துள்ளார். ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வு நேரம் பிற்பகல் 2:00 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது, இது இந்தியாவில் காலை 11:30 மணி ஆகும். 

ஸ்மார்ட்போன் அதன் BIS சான்றிதழைப் பெற்றுள்ளதால் ரியல்மீ GT 5 ஜி இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை இல்லை. ஸ்மார்ட்போனில் பின்புற பேனலில் மூன்று கேமராக்கள் கொண்ட ‘GT’ லோகோவும் மற்றும் முன்பக்கத்தில் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. ரியல்மீ GT 5 ஜி லெதர் மற்றும் கிளாஸ் பதிப்புகளிலும் வரும் என்று கூறப்படுகிறது.

முதன்மை ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் கூடுதலாக, ரியல்மீ GT 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பஞ்ச்-ஹோல் செல்பி கேமரா மற்றும் 120 Hz வரை புதுப்பிப்பு வீதத்துடன் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 125W அல்ட்ராடார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று வதந்திகள் பரவியுள்ளது. ரியல்மீயின் 125W அல்ட்ராடார்ட் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம் 4,000mAh பேட்டரியை மூன்று நிமிடங்களில் 33% வரை சார்ஜ் செய்வதாகவும், 20 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்வதாகவும் கூறப்படுகிறது.

ரியல்மீ GT 5 ஜி போனின் டிரிபிள் கேமரா அமைப்பு 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மென்பொருள் முன்னணியில், ரியல்மீ GT 5ஜி பெரும்பாலும் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மீ UI 2.0 உடன் இயங்கும்.

Views: - 59

0

0