வெளியானது Realme GT Master ஃபர்ஸ்ட் லுக் | அறிமுகமாகும் தேதி இதுதான்!

15 July 2021, 3:47 pm
Realme GT Master Edition first look revealed, to launch on 21st July
Quick Share

பல முறை கசிவுகள் வெளியான பிறகு, ரியல்மீ இறுதியாக ரியல்மீ GT மாஸ்டர் பதிப்பின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. ஜப்பானிய தொழில்துறை வடிவமைப்பு மாஸ்டர் நாவோடோ புகாசாவா என்பவரால் இந்த GT மாஸ்டர் பதிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ரியல்மீ GT மாஸ்டர் பதிப்பு 2021 ஜூலை 21 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படும்.

ரியல்மீ GT மாஸ்டர் பதிப்பு பர்ஸ்ட் லுக்

Realme GT Master Edition first look revealed, to launch on 21st July

ரியல்மீ GT மாஸ்டர் பதிப்பின் பர்ஸ்ட் லுக்கில் சிமென்ட் சாம்பல் நிறத்தில் ரியல்மீ GT மாஸ்டர் பதிப்பின் பின்புற டிசைன் காண்பிக்கப்பட்டுள்ளது. இது கேமராவின் வலது பக்கத்தில் ரியல்மீ 3D லோகோவுடன் முதல் முறையாக சைவ தோல் வடிவமைப்பை கொண்டுள்ளது. 

ரியல்மீ GT மாஸ்டர் பதிப்பிற்கு முன்பு, நாவோடோ புகாசாவா ரியல்மீ X மாஸ்டர் பதிப்பின் ஆனியன் மற்றும் கார்லிக் பதிப்பு, ரியல்மீ X2 புரோ மாஸ்டர் பதிப்பு கான்கிரீட் மற்றும் ரெட் பிரிக்க பதிப்பு ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.

விவரக்குறிப்புகள்

வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஜீக்பெஞ்ச் தளத்தில் முன்பே காணப்பட்டது. 1.80GHz ஆக்டா கோர் செயலி ரியல்மீ GT மாஸ்டர் பதிப்பை இயக்கும். இதன் சிப்செட் ஸ்னாப்டிராகன் 870 SoC உடன் தொடர்புடைய ‘கோனா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 12 ஜிபி RAM இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும், சமீபத்தில் கசிந்த ஆவணம் ஸ்னாப்டிராகன் 778G SoC சாதனத்தை இயக்கும் என்பதைக் காட்டுகிறது. இதன் பொருள் பட்டியல் GT மாஸ்டர் எக்ஸ்ப்ளோரேஷன் பதிப்பாக இருக்கலாம்.

Realme GT Master Edition first look revealed, to launch on 21st July

பிரபல டிப்ஸ்டரின் தகவலின்படி, வரவிருக்கும் வரிசையில் GT மாஸ்டர் பதிப்பு மற்றும் GT மாஸ்டர் எக்ஸ்ப்ளோரேஷன் பதிப்பு ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இருக்கும்.

கசிந்த ஆவணம் ரியல்மீ GT மாஸ்டர் பதிப்பு 6.43″ 120 ஹெர்ட்ஸ் சாம்சங் AMOLED திரையில் 360 Hz தொடு மாதிரி விகிதத்தைக் கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. கூடுதலாக, நீங்கள் 64MP முதன்மை, 8MP அல்ட்ராவைடு மற்றும் 2MP மேக்ரோ சென்சார்களைக் கொண்ட மூன்று கேமரா அமைப்பைப் பெறலாம். கூடுதலாக, இது 32MP செல்ஃபி கேமராவிற்கு மேல் இடது மூலையில் ஒரு பஞ்ச் ஹோல் கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.

தொலைபேசி 4D விளையாட்டு அதிர்வுகளை ஆதரிக்கும். இது 8 ஜிபி / 128 ஜிபி மற்றும் 8 ஜிபி / 256 ஜிபி ஆகிய  இரண்டு மெமரி விருப்பங்களில் கிடைக்கும். RAM விரிவாக்கத்திற்கு தொலைபேசியின் இன்டெர்னல் ஸ்டோரேஜைப் பயன்படுத்தும் டைனமிக் ரேம் விரிவாக்கம் (DRE) அம்சத்தை தொலைபேசி ஆதரிக்கும். இது 65W சார்ஜிங் கொண்ட 4,300 mAh பேட்டரியை கொண்டிருக்கும். இது 12 நிமிடங்களில் 0 முதல் 50% வரை சென்று 32 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும்.

Realme GT Master Edition first look revealed, to launch on 21st July

ரியல்மீ GT மாஸ்டர் பதிப்பு 8 ஜிபி + 128 ஜிபி மாறுபாட்டின் விலை யூரோ 399 (தோராயமாக ரூ.35,300) ஆகவும். 8 ஜிபி + 256 ஜிபி விலை யூரோ 449 (தோராயமாக ரூ .39,700) ஆகிவும் நிர்ணயம் செய்யப்படக்கூடும்.

Views: - 185

0

0