Realme Narzo 30 5G | பார்த்ததும் வாங்கலாம் இந்த 5ஜி போனை! அம்சங்கள் நிறைய இருக்கு விலையும் குறைவா இருக்கு!

24 June 2021, 7:45 pm
Realme Narzo 30, Narzo 30 5G Launched In India; Price, Specs, Offers To Check Out
Quick Share

Realme இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி என்று அழைக்கப்படுகிறது. 

பெயர் குறிப்பிடுவதுபோல், நார்சோ 30 ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும், நார்சோ 30 5ஜி போன் 5ஜி வசதியை ஆதரிக்கும். கேமரா வடிவமைப்பில் சிறிய மாற்றத்துடன் இரு சாதனங்களும் ஒரே மாதிரியாக தான் தெரிகின்றன. இந்தியாவின் சமீபத்திய Realme ஸ்மார்ட்போன்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் இங்கே.

ரியல்மீ நர்சோ 30 5 ஜி விவரக்குறிப்புகள்

நார்சோ 30 ஸ்மார்ட்போனைப் போலவே, 5ஜி வேரியண்டிலும் 6.5 இன்ச் 90 Hz IPS LCD டிஸ்பிளே 90.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தைக் கொண்டுள்ளது. இது திரையில் 600nits வரை பிரகாசத்தை வழங்க முடியும், 

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் கூடுதல் சேமிப்பு விரிவாக்கத்திற்கான பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரட்டை 5ஜி சிம் இணைப்பை ஆதரிக்கிறது, இது டைமன்சிட்டி 700 செயலியின் தனித்தன்மையில் ஒன்றாகும்.

நார்சோ 30 5ஜி போனின் பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 48 MP முதன்மை சென்சார், 2 MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 MP போர்ட்ரெய்ட் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 16MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. 

Realme நர்சோ 30 5ஜி போனில் இருக்கும் மற்றொரு சிறப்பான அம்சம் என்னவென்றால், இது 4K வீடியோக்களை பதிவு செய்ய முடியாது. ஆனால் அதே சமயம் Realme நர்சோ 30 போனில் 30fps இல் 4K வீடியோக்களை பதிவுச் செய்யும் திறன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Realme நர்சோ 30 5ஜி 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, ஆனால் சார்ஜிங் வேகம் 18W ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. அதுவே நார்சோ 30 போனில் 30W வேகமான சார்ஜிங் வசதி இருப்பதை ஒப்பிட்டு பார்க்கையில் இது ஒரு குறைபாடாக பார்க்கப்படுகிறது. Realme நர்சோ 30 5ஜி 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய ஒரே ஒரு கட்டமைப்பில் மட்டுமே கிடைக்கிறது, மேலும் இந்த சாதனம் ஜூன் 30 முதல் ரூ.15,999 விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

Views: - 181

0

0