Realme Narzo 30 போனின் புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம் | விலை எவ்ளோ தெரியுமா?

By: Dhivagar
5 August 2021, 10:01 am
Realme Narzo 30 gets a new 6GB 64GB variant in India
Quick Share

ரியல்மீயின் பட்ஜெட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் ஆன நார்சோ 30, இந்தியாவில் ஜூன் மாதம் 4 ஜிபி/64 ஜிபி மற்றும் 6 ஜிபி/128 ஜிபி ஆகிய இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்போது, ​​தொழில்நுட்ப நிறுவனமான ரியல்மீ புதிய 6GB/64GB பதிப்பை ரூ.13,499 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆகஸ்ட் 5 முதல் பிளிப்கார்ட் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.

ரியல்மீ நார்சோ 30 LCD டிஸ்ப்ளே, மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் மீடியாடெக் ஹீலியோ G95 சிப்செட் உடன் இயங்குகிறது.

ரியல்மீ நார்சோ 30 ஒரு பன்ச்-ஹோல் கட்-அவுட் உடன் கவனிக்கத்தக்க கீழ்புற பெசல் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. பின்புறத்தில், செங்குத்தாக சீரமைக்கப்பட்ட மூன்று கேமரா அமைப்பு உள்ளது.

இந்த கைபேசியில் 6.5-இன்ச் முழு எச்டி+ (1080×2400 பிக்சல்கள்) IPS LCD டிஸ்பிளே உடன் 20: 9 திரை விகிதம், 90 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 580-நிட்ஸ் அதிகபட்ச பிரகாசம் ஆகியவை உள்ளது.

இது ரேசிங் ப்ளூ மற்றும் ரேசிங் சில்வர் நிறங்களில் வாங்க கிடைக்கும்.

ரியல்மீ நார்சோ 30 மீடியா டெக் ஹீலியோ G95 செயலி உடன் இயக்கப்படுகிறது, இது 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹூட்டின் கீழ், இது Realme UI 2.0 இல் இயங்குகிறது மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

இணைப்பைப் பொறுத்தவரை, இந்த கைபேசி டூயல்-பேன்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.0, GPS, ஒரு ஹெட்போன் ஜேக் மற்றும் ஒரு டைப்-C போர்ட் ஆதரவு ஆகியவற்றை வழங்குகிறது.

ரியல்மீ நார்சோ 30 விலை 4GB/64GB மாடலுக்கு ரூ.12,499 ஆகவும், 6 ஜிபி/64 ஜிபி மாடலுக்கு ரூ.13,499 ஆகவும், மற்றும் 6GB/128GB பதிப்பிற்கு ரூ.14,499 ஆகிவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய 6 ஜிபி/64 ஜிபி மாடல் இன்று அதாவது ஆகஸ்ட் 5 முதல் பிளிப்கார்ட்டின் Big savings Day விற்பனையின் ஒரு பகுதியாக விற்பனைக்கு வரும்.

நார்சோ 30 போன் ரியல்மீ இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாகவும் வாங்க கிடைக்கும்.

Views: - 205

0

0