மிக விரைவில் இந்தியாவில் ரியல்மீ நர்சோ 30 சீரிஸ் | முக்கிய விவரங்கள் இங்கே | Realme Narzo 30A

28 January 2021, 11:39 am
Realme Narzo 30A tipped to launch in India soon
Quick Share

ரியல்மீ விரைவில் நார்சோ 30 தொடர் ஸ்மார்ட்போன்களை தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற ஆசிய சந்தைகளில் அறிமுகப்படுத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தொலைபேசி NBTC மற்றும் BIS சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.

ரியல்மீ நர்சோ 30A ஸ்மார்ட்போன் தாய்லாந்தின் தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையத்தின் (NBTC) சான்றிதழ் தளத்தின் தரவுத்தளத்தில் தோன்றியது.

RMX3171 என்ற மாடல் எண் கொண்ட ரியல்மீ தொலைபேசியும் இந்திய தர நிர்ணய பணியகத்திலிருந்து (BIS) சான்றிதழைப் பெற்றுள்ளது. BIS சான்றிதழ் தொலைபேசியின் பெயரையோ அல்லது வேறு ஏதேனும் தகவலையோ வெளிப்படுத்தவில்லை. RMX3171 தொலைபேசி உண்மையில் நார்சோ 30A ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதை NBTC சான்றிதழ்  உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில், ரியல்மீ நர்சோ 30 தொடர் ஜனவரி மாதத்தில் அறிமுகமாகும் என்ற தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த மாதத்தில் ரியல்மீ நர்சோ 30 வெளியாக வாய்ப்பில்லை, இப்போது நார்சோ 30A வரிசை பிப்ரவரியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த தொடரில் நர்சோ 30 மற்றும் நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இருக்கும். நார்சோ 30 தொடரைப் பற்றிய விவரக்குறிப்புகள் எதுவும் தற்போது தெரியவரவில்லை.

நார்சோ 30 தொடரின் கீழ் மூன்று சாதனங்கள் இருக்கும். நார்சோ 20 தொடரில் நார்சோ 20A, நார்சோ 20 மற்றும் நார்சோ 20 ப்ரோ ஆகிய போன்கள் இருந்ததை கருத்தில் கொண்டு பார்க்கையில் இந்த தொடரிலும் நார்சோ 30A, நார்சோ 30 மற்றும் நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ரியல்மீ X4 மற்றும் X7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ரியல்மீ X7 சீரிஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது அது இந்தியாவிலும் அடுத்த மாதத்திலும் அறிமுகமாகிறது.

Views: - 0

0

0