இந்தியாவில் ரியல்மீ ஸ்மார்ட் 4K டிவி அறிமுகம் | ரூ.27,999 முதல் விலைகள் ஆரம்பம்!

1 June 2021, 7:10 pm
Realme Smart 4K TV launched in India
Quick Share

ரியல்மீ இந்தியாவில் புதிய ஸ்மார்ட் 4K டிவிகளை அறிமுகப்படுத்துவதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டிவி 43 அங்குலம்  மற்றும் 50 அங்குலம் என இரண்டு திரை அளவுகளில் கிடைக்கிறது. டி.வி.கள் டால்பி விஷன் இமேஜிங் தொழில்நுட்பம், TUV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழ் மற்றும் 178 டிகிரி கோணத்தில் வருகிறது.

ரியல்மீ ஸ்மார்ட் 4K டிவியின் 43 இன்ச் மாடலின் விலை ரூ.27,999 ஆகவும், 50 அங்குல மாடலின் விலை ரூ.39,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவி ஜூன் 4 முதல் realme.com, பிளிப்கார்ட் மற்றும் மெயின்லைன் சேனல்கள் வழியாக வாங்க கிடைக்கும்.

ரியல்மீ ஸ்மார்ட் டிவி 4K 3840 x 2160 ரெசல்யூஷன், 1.07 பில்லியன் வண்ணங்கள், 83% NTSC மற்றும் 90% DCI-P3 உடன் வருகிறது. ஸ்மார்ட் டிவி 4K ஆனது – ஸ்டாண்டர்ட், விவிட், ஸ்போர்ட், மூவி, கேம், எனர்ஜி சேவிங் மற்றும் யூசர் ஆகிய ஏழு காட்சி முறைகளைக் கொண்டுள்ளது. இந்த டி.வி.க்கள் மீடியாடெக் 4K UHD செயலியில் இயங்குகின்றன, இதில் ARM  கார்டெக்ஸ் A53 1.5 GHz CPU மற்றும் புதிய மாலி G 52 GPU உள்ளது, இது 16 ஜிபி ROM  கொண்ட 2 ஜிபி RAM கொண்டுள்ளது. மென்பொருள் முன்னணியில், ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்குகிறது.

ஆடியோவைப் பொறுத்தவரை, ஸ்மார்ட் டிவியில் 24W குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. மேலும் டால்பி அட்மோஸ் ஆதரவும் உள்ளது. ஸ்மார்ட் டி.வி.கள் DTS HD சவுண்ட் சிஸ்டம் (டிஜிட்டல் தியேட்டர் சிஸ்டம்ஸ்) சரவுண்ட் சவுண்ட் ஆடியோ தொழில்நுட்பத்துடன் வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் டிவி ஹேண்ட்ஸ் ஃப்ரீ குரல் கட்டுப்பாட்டுடன் வருகிறது. பயனர்கள் டிவியை கூகிள் அசிஸ்டன்ட் உடன் தொலைவில் இருந்து பேச்சின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எதிர்பார்த்தபடி, இந்த சாதனம் ஒரு உள்ளமைக்கப்பட்ட Google Asisstant ஆதரவும் கொண்டுள்ளது. அதோடு ரிமோட்டில் யூடியூப், நெட்ஃபிலிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் கூகிள் அசிஸ்டெண்ட் ஆகியவற்றின் விரைவான அணுகலுக்காக நான்கு ஹாட்கீகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இணைப்பைப் பொறுத்தவரை, ரியல்மீ ஸ்மார்ட் டிவி 4K 2.4GHz / 5GHz Wi-Fi மற்றும் அகச்சிவப்பு, புளூடூத் 5.0 ஐக் கொண்டுள்ளது. HDMI (ARC) × 1 HDMI × 2 USB × 2 AV × 1 Tuner x 1 ANT x 1 LAN × 1 AUDIO OUT × 1 ஆகிய பல போர்ட்களைக் கொண்டுள்ளது.

Views: - 148

0

0