இந்தியாவில் பண்டிகை சமயத்தில் மட்டும் இத்தனை லட்சம் ரியல்மீ ஸ்மார்ட்போன்கள் விற்றுள்ளதா?
20 November 2020, 4:50 pmசீன ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மீ, இந்த ஆண்டு இந்தியாவில் பண்டிகை ஷாப்பிங் பருவத்தில் 45 நாட்களில் 6.3 மில்லியன் அதாவது சுமார் 63 லட்சத்திற்கும் மேலான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ததாக அறிவித்துள்ளது, இது போன வருடத்தை விட இந்த வருடத்தில் 20% மேல் வளர உதவியுள்ளது.
ஒட்டுமொத்தமாக, அந்த காலகட்டத்தில் 8.3 மில்லியன் சாதனங்களை விற்றதாக நிறுவனம் கூறுகிறது, இதில் 1,90,000 க்கும் மேற்பட்ட யூனிட் ரியல்மீ ஸ்மார்ட் டிவிக்கள், 3,50,000 க்கும் மேற்பட்ட அணியக்கூடிய ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் 1.25 மில்லியனுக்கும் அதிகமான ஆடியோ தயாரிப்புகள் ஆகியவை அடங்கும்.
பண்டிகை கால விற்பனையின் ஒரு பகுதியாக, 1.35 மில்லியனுக்கும் அதிகமான நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், 1.2 மில்லியனுக்கும் அதிகமான ரியல்மீ C11 யூனிட்கள் மற்றும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான யூனிட் ரியல்மீ 7-சீரிஸ் சாதனங்களை விற்றதாக ரியல்மீ தெரிவித்துள்ளது. உலகளவில் 50 மில்லியன் சாதனங்களின் விற்பனையை எட்டிய மிக வேகமாக பிராண்டாக மாறியுள்ளதாகவும் நிறுவனம் கூறுகிறது, அவற்றில் 30 மில்லியன் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளன.
ரியல்மீ தற்போது 15% சந்தைப் பங்கைக் கொண்ட இந்தியாவில் நான்காவது பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டாகும். சந்தை நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்சின் தரவுகளின்படி, சாம்சங் Q3 இல் நாட்டின் சிறந்த ஸ்மார்ட்போன் விற்பனையாளராக 24% சந்தை பங்கைக் கொண்டு தனது முதலிடத்தைத் தக்க வைத்துக்க்கொண்டுள்ளது, அதே நேரத்தில் சியோமி சந்தையில் 23% பங்கைக் கொண்டு இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது. சக BBK எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விவோ 16% சந்தைப் பங்கைக் கொண்டு மூன்றாவது இடத்தில் உள்ளது.
0
0