ரியல்மீ உலகின் முதல் SLED 4K ஸ்மார்ட் டிவியை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது
26 September 2020, 4:25 pmரியல்மீ நிறுவனத்திடமிருந்து புதிய ஸ்மார்ட் டிவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. ரியல்மீ உலகின் முதல் SLED 4K ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது. நிறுவனம் தனது வலைப்பதிவில் இந்த தகவலை வழங்கியுள்ளது. டிவியின் அளவு 55 அங்குலமாகவும், டிவி 4K தெளிவுத்திறனுடனும் இருக்கும். SLED 4K ஸ்மார்ட் டிவியில் துல்லியமான வண்ணங்கள் கிடைக்கும் என்றும் சிறந்த கண் பராமரிப்பு அம்சம் கிடைக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டிவியில் SLED டெக்னாலஜி என்ற ஒன்றில் ரியல்மீ நிறுவனம் வேலை செய்கிறது.
ரியல்மீ தகவலின் படி, அதன் SLED 4K ஸ்மார்ட் டிவி 55 அங்குல அளவுடன் வரும், மேலும் TUV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழ் உடன் வரும். SLED-யில் NTSC யின் மதிப்பு எல்.ஈ.டி மற்றும் QLEDயை விட அதிகமாக இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
ரியல்மீ SLED 4K ஸ்மார்ட் டிவி நீல ஒளியின் மோசமான விளைவுகளைத் தடுக்கும் திறன் கொண்ட பின்னொளிக்கு RGB ஐப் பயன்படுத்தும். QLED டிவியில் நீல பின்னொளி ஆரம்ப மட்டத்தில் உள்ளது, அது பின்னர் வெள்ளை ஒளியாக மாறும் என்று ரியல்மீ கூறுகிறது.
பின்னொளியில் RGB ஐப் பயன்படுத்துவது டிவியில் சமநிலை வண்ணங்களைக் கொடுக்கும் என்று ரியல்மீ கூறுகிறது. வேறு விதமாக சொல்வதென்றால், சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களின் அடர்த்தி அப்படியே இருக்கும். இருப்பினும் இந்த வரவிருக்கும் டிவியின் ஸ்பீக்கர்ஸ், செயலிகள் மற்றும் ஸ்டோரேஜ் பற்றிய எந்த தகவலையும் ரியல்மீ பகிர்ந்து கொள்ளவில்லை. மேலும், வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இந்திய சந்தையில் ரியல்மீ ஸ்மார்ட் டிவிகள் உள்ளன, அவற்றில் 43 அங்குல மற்றும் 32 அங்குல டிவிகள் உள்ளன. இந்த இரண்டு டி.வி.களும் எல்.ஈ.டி டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டில் வேலை செய்கின்றன, அதே நேரத்தில் வரவிருக்கும் டிவியும் ஆண்ட்ராய்டு ஆதரவுடன் வரும்.