ரியல்மீ X7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் கேமரா, வண்ண வடிவமைப்பு விவரங்கள் வெளியானது!!
24 August 2020, 12:11 pmரியல்மீயின் சமீபத்திய மாடல்களான ரியல்மீ X7 மற்றும் ரியல்மீ X7 புரோ ஆகியவை சில நாட்களில் அறிமுகமாக உள்ளன. அறிமுகத்திற்கு முன்னதாக, புதிய ஸ்மார்ட்களைப் பற்றிய சில முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன. ரியல்மீ விளம்பரப் படங்களுடன் போனின் சில அம்சங்கள் வண்ண விருப்பங்கள் மற்றும் கேமரா அமைப்பு குறித்த விவரங்களை முன்னோட்டமாக வெளியிட்டுள்ளது.
ரியல்மீ X7 தொடரின் அம்சங்கள்
முன்னதாக, நிறுவனம் ரியல்மீ X7 தொடரில் 120 Hz அமோலெட் டிஸ்ப்ளே இருக்கும் என்று வெளிப்படுத்தியது. வெய்போவின் சமீபத்திய டீஸர் ஸ்மார்ட்போன்களின் பின்புறத்தில் ‘டேர் டு லீப்’ என்ற வாசகத்துடன் புதிய வண்ணங்களை வெளிப்படுத்துகிறது. டீஸர் படங்களில் ஒன்று நீல நிறத்தில் ரியல்மீ X7 போனை வெளிப்படுத்துகிறது. தங்கம் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களும் காணப்படுகின்றன.
வண்ண மாறுபாடுகளைத் தவிர, புதிய விளம்பர படங்கள் பின்புற கேமராக்கள் அமைப்பைப் பற்றிய தகவலையும் வெளிப்படுத்துகின்றன. நான்கு சென்சார்கள் மற்றும் LED ஃபிளாஷ் கொண்ட செவ்வக கேமரா தொகுதி ஒன்றை நாம் காணமுடிகிறது. முந்தைய அறிக்கைகள் 64MP குவாட்-கேமரா அமைப்பை வெளிப்படுத்தியுள்ளன. புரோ வேரியண்ட்டில் நுழைவு நிலை ரியல்மீ X7 போனில் இருப்பதை விட பெரிய லென்ஸ் இருக்கிறதா என்பது தெளிவாக இல்லை.
ரியல்மீ X7 சீரிஸ்: இதுவரை நாம் அறிந்தவை
விளம்பர படங்கள் மற்றும் சான்றிதழ் பட்டியல்கள் வரவிருக்கும் ரியல்மீ X7 தொடர் குறித்த சில முக்கிய விவரங்களை வெளிப்படுத்தியுள்ளன. ரியல்மீ X7 ப்ரோ 120 Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.55 அங்குல AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று இரண்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. புரோ வேரியண்டிற்கு 32 MP செல்பி கேமரா மற்றும் 64 MP குவாட் கேமரா அமைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500 mAh பேட்டரி இருக்குமென்றும் அறிக்கைகள் பரிந்துரைக்கின்றன. ஹூட்டின் கீழ், மீடியா டெக் டைமன்சிட்டி 1000+ செயலி எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பின்புறத்தில் கைரேகை சென்சார் இல்லை என்பதை சமீபத்திய டீஸர் உறுதிப்படுத்துகிறது. இது AMOLED டிஸ்ப்ளே உடன் டிஸ்பிளேவில் கைரேகை சென்சார் உடன் வரக்கூடும்.
ரியல்மீ X7 சீரிஸ்: எதிர்பார்ப்புகள் என்னென்ன?
இந்தியாவில், நுழைவு நிலை மற்றும் இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கான பெரிய பயனர் தளத்தைக் கொண்ட பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ரியல்மீ நிறுவனமும் ஒன்றாகும்.
அதன் தோற்றத்தை வைத்துப் பார்க்கையில், ரியல்மீ X7 சீரிஸ் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கலாம் மற்றும் ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ், சாம்சங் கேலக்ஸி M31s மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் ஆகியவற்றுடன் போட்டியிடக்கூடும். தொலைபேசி செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகமாகும் என்று தகவல்கள் உறுதிப்படுத்தயுள்ளன.