என்னய்யா இது ஆப்பிள் மேக் புரோவோட காப்பியா? ரியல்மீ புக் லேப்டாப் பற்றிய சுவாரசியமான அப்டேட் இதோ உங்களுக்காக!

13 July 2021, 6:05 pm
Realme's first laptop will look like Apple's MacBook Pro
Quick Share

ரியல்மீ புக் லேப்டாப் குறைந்த விலையில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் வெளியாவதற்கு முன்னதாக இப்போது, ரியல்மீ புக் குறித்த புதிய தகவல் கசிந்துள்ளது. மடிக்கணினியின் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் மற்றும் விலை மற்றும் வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

ரியல்மீ புக்: டிசைன்

இந்த லேப்டாப் ஒரு பெரிய டிராக்பேடுடன் உடன் பிரஷ்டு அலுமினிய டிசைனில் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. மடிக்கணினியில் கருப்பு நிற கீபோர்டு மற்றும் இருபுறமும் போர்ட்கள் இருக்கும். ஆப்பிளின் மேக்புக் போன்ற வடிவமைப்பை இது கொண்டிருப்பது போல தெரிகிறது. பவர் பட்டன் கைரேகை சென்சார் ஆகவும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 3.5 மிமீ ஹெட்போன் ஜேக், 1 x யூ.எஸ்.பி-A போர்ட் மற்றும் இடதுபுறத்தில் 2 எக்ஸ் USB-C போர்ட்களைக் கொண்டிருக்கும்.

ரியல்மீ புக்: விவரக்குறிப்புகள்

விவரக்குறிப்புகளைப் பொருத்தவரை, இது 14 அங்குல FHD LED பேனல் உடன் ஆன்டி-கிளேர் கோட்டிங் கொண்டிருக்கும். இன்டெல்லின் 11 வது தலைமுறை செயலிகள் உடன் i3 மற்றும் i5 விருப்பங்களைக் கொண்டிருக்கக்கூடும். வெளியாகும் நேரத்தில் பல RAM மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்டோஸ் 11 லேப்டாப்பில் முன்பே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும்.

ரியல்மீ புக்: விலை, வெளியீட்டு தேதி

இந்தியாவில் ரியல்மீ லேப்டாப்பின் விலை ரூ.40,000 க்கும் குறைவாகவே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மீ புக் ஆகஸ்ட் 2021 இன் இறுதியில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மீ தொடர்பான வேறு செய்திகளைப் பொறுத்தவரை, வரவிருக்கும் ரியல்மீ GT மாஸ்டர் பதிப்பின் ரெண்டர்களும் கசிந்துள்ளன. ரியல்மீ GT மாஸ்டர் பதிப்பு 8 ஜிபி + 256 ஜிபி மாறுபாட்டின் விலை யூரோ 399 (தோராயமாக ரூ.35,300) ஆகவும் 12 ஜிபி + 256 ஜிபி விலை யூரோ 449 (தோராயமாக ரூ .39,700) ஆகவும் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

Views: - 189

0

0