மீடியாடெக் டைமென்சிட்டி 810 உடன் வெளியாகப்போகிறது முதல் ரியல்மீ ஸ்மார்ட்போன்! பிரத்தியேக விவரங்கள் இதோ | Realme | Mediatek Dimensity 810

Author: Hemalatha Ramkumar
30 August 2021, 4:11 pm
Realme’s First Smartphone Powered by MediaTek Dimensity 810 Coming Soon in India
Quick Share

உலகளாவிய அரைக்கடத்திகள் தயாரிப்பு நிறுவனமான மீடியாடெக் திங்களன்று இந்தியாவில் சமீபத்திய மீடியாடெக் டைமென்சிட்டி 810 செயலி உடன் இயங்கும் முதல் 5 ஜி ஸ்மார்ட்போனை தயார் செய்ய ரியல்மீ உடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளது. 

நிறுவனத்தின் தகவலின்படி, மீடியாடெக் டைமென்சிட்டி 810 செயலி அனைத்து சூழலிலும் சிறந்த செயல்திறன், பிரீமியம் டிஸ்பிளேக்கள் மற்றும் சுப்ரீம் கேமராக்களை வழங்கும் திறன் கொண்டது, இவை அனைத்தும் 5ஜி ஸ்மார்ட்போன் பேட்டரி ஆயுளை உயர்த்தும் ஒரு முன்னணி 6 nm சிப் வடிவமைப்பில் கிடைக்கும்.

ரியல்மீ X7 5G உடன் MediaTek Dimensity 800U உட்பட பல MediaTek 5G செயலிகளை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் பிராண்ட் Realme தான். அதையடுத்து Realme 8 5G உடன் MediaTek Dimensity 700 மற்றும் Realme X7 Max 5G உடன் MediaTek Dimensity 1200 ஆகிய சிப்செட்களை ரியல்மீ கொண்டு வந்தது.

மீடியாடெக் டைமென்சிட்டி 810 ARM கார்டெக்ஸ்-A76 CPU 2.4 GHz வரையிலான வேகத்துடன், பிரீமியம் கேமரா அம்சங்கள் கொண்டு ArcSoft உடன் இணைந்து கலைநயமிக்க AI-கலர் மற்றும் குறைந்த ஒளியில் புகைப்படம் எடுப்பதற்கான மேம்பட்ட இரைச்சல் குறைப்பு நுட்பங்களை வழங்குகிறது. TSMC இன் முன்னணி 6 nm உற்பத்தி செயல்முறையைக் கொண்டுள்ளது. இது முன்பு முதன்மை வகுப்பு 5ஜி போன்களில் மட்டுமே கிடைத்தது.

மீடியாடெக் ஹைப்பர் இன்ஜின் 2.0 இன் Intelligent Resource Management Engine, நீண்ட நேரம் கேம் விளையாடும்போதும் மேம்பட்ட ஆற்றல் செயல்திறனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் 2CC CA ஐ 120MHz ஸ்பெக்ட்ரமை உள்ளடக்கியது, இதில் மிக்ஸ்டு டூப்லெக்ஸ் FDD+TDD இணைப்புகள் உள்ளன.

Views: - 216

0

0