செப்டம்பர் 15 அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது ரெட்மி 9i ஸ்மார்ட்போன்! எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்னென்ன?

9 September 2020, 4:47 pm
Redmi 9i to launch in India on September 15
Quick Share

ரெட்மி 9i எனப்படும் மற்றொரு நுழைவு நிலை ஸ்மார்ட்போனை செப்டம்பர் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக சியோமி இன்று உறுதிப்படுத்தியுள்ளது. சியோமி ரெட்மி 9A ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ரெட்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தின் வாயிலாக இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் 15 அன்று மதியம் 12 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ள வெளியீட்டு நிகழ்விற்கான ஒரு தனி வலைத்தள பக்கத்தையும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

Mi இந்தியா நிகழ்வுகள் பக்கத்தில் உள்ள டீஸர் படங்களின்படி, ரெட்மி 9i 4 ஜிபி ரேம் உடன் வரும், மேலும் ஒரு வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருக்கும். இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பிளிப்கார்ட் மற்றும் Mi.com ஆகியவற்றில் கிடைக்கும்.

ரெட்மி 9i வலது பக்கத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பொத்தானைக் கொண்டிருக்கும், சிம் கார்டு சிலாட் வலதுபுறத்தில் இருப்பதாக தெரிகிறது. மேலே, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது, ஸ்பீக்கர் கிரில் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கீழே இருப்பதாகத் தெரிகிறது.

அறிக்கைகளின் அடிப்படையில், ரெட்மி 9i தற்போதைய ரெட்மி 9A இன் மறுபெயரிடப்பட்ட மாதிரியாக இருக்கலாம் என்று ஊகங்கள் உள்ளன, இது இந்த ஆண்டு சிறிய மேம்பாடுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

சமீபத்திய அறிக்கையின்படி, ரெட்மி 9i நேச்சர் கிரீன், சீ ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் கலர் விருப்பங்கள் உள்ளிட்ட மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும். அடிப்படை மாடல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும். இரண்டாவது மாடலில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கும்.

ரெட்மி 9i 6.53 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளேவுடன் 1600 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் மற்றும் 20:9 விகிதத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2GHz ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G25 செயலி இயங்கும். இது மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பிடத்தைக் கொண்டிருக்கும்.

ரெட்மி 9i 5,000 mAh பேட்டரி உடன் ஆதரிக்கப்படும், மேலும் IR பிளாஸ்டர், யூ.எஸ்.பி-C போர்ட் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்கும். இந்த தொலைபேசியில் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 10 இல் இயங்கும், இது MIUI 11 ஐ அடிப்படையாகக் கொண்டது, இது MIUI 12 க்கு மேம்படுத்தப்படும்.

Views: - 0

0

0