108 MP கேமராவுடன் ரெட்மி K40 ப்ரோ ஸ்மார்ட்போன்? அடுத்தது ரெட்மி K40S…?

5 February 2021, 10:56 am
Redmi K40 Pro to reportedly sport a 108MP camera, Redmi K40S also in pipeline
Quick Share

ரெட்மி K40 சீரிஸ் இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகமாவது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் ரெட்மி K40 மற்றும் ரெட்மி K40 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. இப்போது ரெட்மி K40 ப்ரோ கேமரா தொடர்பாக ஆன்லைனில் ஒரு புதிய கசிவு வெளிவந்துள்ளது.

வெய்போவில் உள்ள சீன டிப்ஸ்டர் ஆன Digital Chat Station தகவலின்படி, ரெட்மி K40 ப்ரோ 108 மெகாபிக்சல் பிரதான சென்சார் கொண்டிருக்கும். ரெட்மி K40 தொடரில் ரெட்மி K40, ரெட்மி K40S மற்றும் ரெட்மி K40 ப்ரோ ஆகிய மூன்று தொலைபேசிகள் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ரெட்மி K40 சீரிஸ் ஸ்னாப்டிராகன் 888 SoC சிப்செட் உடன் இயக்கப்படும் என்பதை ரெட்மியின் பொது மேலாளர் லு வெய்பிங் முன்பு உறுதிப்படுத்தினார். இந்தத் தொடர் மிகவும் விலையுயர்ந்த பிளாட் ஸ்கிரீன் போன்கள் என்று கூறப்படுகிறது. பேட்டரி 4,000mAh க்கும் அதிகமாக இருக்கும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். விலையைப் பொறுத்தவரையில், ரெட்மி K40 சீரிஸின் ஆரம்ப விலை 2999 யுவான் (தோராயமாக ரூ.34,000) ஆக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் தொடரின் கூடுதல் விவரக்குறிப்புகள் தற்போது தெரியவில்லை. இந்த மாதத்திலேயே அறிமுகம் நடக்கவிருப்பதால், வரும் நாட்களில் தொலைபேசி குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் புதுப்பிப்புகளுக்கு updatenews360 உடன் இணைந்திருங்கள்.

ரெட்மிக்கு தொடர்புடைய செய்திகளில், ரெட்மி 8 மற்றும் 8A ஆகியவை இந்தியாவில் MIUI 12 புதுப்பிப்பைப் பெற்றுள்ளன. ரெட்மி 8 மற்றும் ரெட்மி 8A க்கான MIUI 12 புதுப்பிப்பு பல மேம்பாடுகளுடன் புதிய அம்சங்களையும் மாற்றங்களையும் கொண்டுவருகிறது.

ரெட்மி 8A MIUI 12 புதுப்பிப்பு பதிப்பு MIUI V12.0.1.0.QCPINXM உடன் வருகிறது, அதே நேரத்தில் ரெட்மி 8 MIUI 12 புதுப்பிப்பை V12.0.1.0.QCNINXM பதிப்போடு பெறுகிறது. புதுப்பித்தலுக்குப் பிறகு, இரண்டு சாதனங்களும் இன்னும் Android 10 OS இல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புதுப்பிப்பு ஜனவரி 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் புதிய மறு வடிவமைக்கப்பட்ட MIUI 12 பயனர் இடைமுகத்துடன் வரும்.

Views: - 0

0

0

1 thought on “108 MP கேமராவுடன் ரெட்மி K40 ப்ரோ ஸ்மார்ட்போன்? அடுத்தது ரெட்மி K40S…?

Comments are closed.