ரெட்மியின் RedmiBook Pro மற்றும் e-Learning Edition லேப்டாப்கள் அறிமுகம் | விலை & விவரங்கள்

Author: Dhivagar
4 August 2021, 8:52 am
v
Quick Share

ரெட்மி தனது ரெட்மிபுக் 15 சீரிஸ் மடிக்கணினிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த தொடரில் ரெட்மிபுக் புரோ மற்றும் ரெட்மிபுக் இ-லேர்னிங் எடிஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாடல்களின் விலை ரூ.41,999 முதல் ஆரம்பமாகும் மற்றும் Mi.com, Flipkart மற்றும் Mi Home ஸ்டோர்ஸ் வழியாக வாங்க கிடைக்கும்.

டிஸ்பிளே விவரங்கள்

Redmi launches RedmiBook Pro and e-Learning Edition laptops in India

இந்த லேப்டாப்கள் 15.6 அங்குல LCD டிஸ்ப்ளேவை வழங்குகின்றன மற்றும் 11 வது தலைமுறை இன்டெல் கோர் i3/i5 செயலியில் இருந்து ஆற்றல் பெறுகின்றன.

ரெட்மிபுக் 15 தொடரில் பாலிகார்பனேட் சேசிஸ் மற்றும் பக்கங்களில் குறுகிய பெசல்கள் கொண்ட மெலிதான உடலமைப்பு இடம்பெறும். இந்த மடிக்கணினிகள் 15.6 அங்குல முழு HD (1920×1080 பிக்சல்கள்) டிஸ்பிளேவை 81.8% ஸ்கிரீன்-டூ-பாடி விகிதத்தில் கொண்டிருக்கும்.

இந்த லேப்டாப் ஒரே ஒரு சார்கோல் கிரே வண்ண விருப்பத்தில் மட்டுமே கிடைக்கும்.

ஸ்பெஷல் அம்சங்கள்

ரெட்மிபுக் புரோ லேப்டாப் மல்டி-டச் டிராக்பேட் மற்றும் சிசர் மெக்கானிசம் (scissor mechanism) கீபோர்டு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இது 19.9 மிமீ தடிமன் மற்றும் 1.8 கிலோகிராம் அளவில் அளவிடப்படுகிறது.

Redmi launches RedmiBook Pro and e-Learning Edition laptops in India

போர்ட் விவரங்கள்

ரெட்மிபுக் புரோ இரண்டு USB 3.2 தலைமுறை -1 போர்ட்கள், ஒரு USB 2.0 போர்ட், ஒரு HDMI ஸ்லாட், ஒரு SD கார்டு ரீடர் மற்றும் ஒரு ஹெட்போன் ஜேக் உட்பட பல I/O போர்ட்களை வழங்குகிறது. இணைப்பிற்கு, இது வைஃபை 5 மற்றும் ப்ளூடூத் 5.0 வசதியை ஆதரிக்கிறது.

ரெட்மிபுக் புரோ மற்றும் ரெட்மிபுக் இ-லியர்னிங் பதிப்பு ஒரு HD வெப் கேமரா, MS Office, Mi Smart Share, இரண்டு 2W ஸ்பீக்கர்கள் மற்றும் DTS ஆடியோ செயலாக்க அமைப்பு ஆகியவற்றை வழங்குகின்றன.

செயலி விவரங்கள்

ரெட்மிபுக் புரோ 11 வது தலைமுறை இன்டெல் கோர் i5-11300H செயலியில் இருந்து ஆற்றல் பெறுகிறது, அதே நேரத்தில் இ-லியர்னிங் பதிப்பு இன்டெல் கோர் i3-115G4 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது.

இந்த லேப்டாப்கள் Intel Iris Xe GPU, 8GB RAM, 512GB வரையிலான SSD ஸ்டோரேஜ், மற்றும் 10 மணிநேர பேட்டரி லைஃப் வழங்குகின்றன.

இவை விண்டோஸ் 10 உடன் பூட்அப் ஆகும் சாதனங்களாக இருந்தாலும விண்டோஸ் 11 க்கு இலவச அப்கிரேடுடன் கிடைக்கும்.

ரெட்மிபுக் புரோ 8GB/512GB மாடலுக்கு ரூ.49,999 விலையுடனும், இ-லியர்னிங் மாடல் 8GB/256GB மற்றும் 8GB/512GB விருப்பங்களுக்கு முறையே ரூ.41,999 மற்றும் ரூ.44,999 விலையுடன் கிடைக்கும். ஆகஸ்ட் 6 மதியம் 12 மணிக்கு முதல் இந்த மாடல்கள் வாங்க கிடைக்கும்.

Views: - 225

0

0