சத்தமே இல்லாமல் ரெட்மி நோட் 10 போனின் விலை உயர்வு!

29 April 2021, 4:10 pm
Redmi Note 10 price hiked in India
Quick Share

இந்தியாவில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மாடலின் விலை சத்தமே இல்லமால் உயர்த்தப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாறுபாட்டின் விலை இப்போது ரூ.12,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 10 – 4 ஜிபி RAM + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி RAM + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வகைகளில் முறையே ரூ.11,999 மற்றும் ரூ.13,999 விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. விலை உயர்வுக்குப் பிறகு, 6 ​​ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கான விலை இப்போது ரூ.14,499 ஆக உள்ளது. அதாவது ஸ்மார்ட்போனின் விலை ரூ.500 அதிகரித்துள்ளது.

ரெட்மி நோட் 10 இன் புதிய விலை ஏற்கனவே அமேசான் இந்தியா மற்றும் mi.com ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது. இது இந்தியாவில் அக்வா கிரீன், ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஷேடோ பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ரெட்மி நோட் 10 விவரக்குறிப்புகள்

ரெட்மி நோட் 10 கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 180 Hz touch sampling rate உடன் 6.43 அங்குல FHD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 33W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரிக்கான ஆதரவுடன் உள்ளது.

இந்த தொலைபேசி 2.2Ghz ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 678 செயலி உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 இல் MIUI 12 உடன் இயங்குகிறது.

கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போன் 48 MP சோனி IMX 582 முதன்மை சென்சார், 8 MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார், 2 MP மேக்ரோ கேமரா மற்றும் 2 MP ஆழம் சென்சார் கொண்ட குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில், இது 13MP செல்ஃபி ஷூட்டர் கொண்டுள்ளது.

Views: - 126

0

0

Leave a Reply