ரெட்மி நோட் 10 வாங்கபோறவங்களுக்கு செம ஷாக் நியூஸ்! நான்காவது முறையா இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல!

Author: Dhivagar
3 August 2021, 5:30 pm
Redmi Note 10 receives its fourth price hike in India
Quick Share

ரெட்மி நோட் 10 போனின் விலை இந்தியாவில் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. தொலைபேசி முறையே 4GB + 64GB மாடலுக்கு ரூ11,999 விலைக்கும் மற்றும் 6GB + 128GB மாடல் ரூ.13,999 விலைக்கும் அறிமுகமானது. இருப்பினும், நிறுவனம் சத்தமே இல்லாமல் ஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அதிகரித்துள்ளது.

நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 10T 5ஜி போனின்  விலையை தற்போது  மேலும் ரூ.500 அதிகரித்துள்ளது.

புதிய விலை உயர்வுக்குப் பிறகு, ரெட்மி நோட் 10 போனின் விலை அடிப்படை 4 ஜிபி + 64 ஜிபி பதிப்பிற்கு 13,499 ரூபாயாகவும், அதேபோல், போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு இப்போது ரூ.15,499 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய விலை இப்போது அமேசான் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Mi.com இல் பிரதிபலிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்வா க்ரீன், ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஷேடோ பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

முதல் முறையாக, ரெட்மி நோட் 10 போன் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.500 விலை உயர்வு பெற்றது, அப்போது இதன் விலை 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.12,499 ஆகவும் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.14,499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன் பிறகு ஜூன் மாதத்தில், தொலைபேசி மீண்டும் இரண்டு முறை விலை உயர்வுகளைப் பெற்றது. அதன் பிறகு, போனின் 4 ஜிபி RAM மாடல் ரூ.12,999 விலைக்கும் 6 ஜிபி ரேம் மாடல் ரூ.14,999 விலைக்கும் விற்பனைச் செய்யப்பட்டது.

அதே போல கடந்த மாதம் இந்தியாவில் ரெட்மி நோட் 10T 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஃபோன் 4GB RAM + 64GB சேமிப்பு பதிப்புக்கு 13999 ரூபாய் விலையும் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் 6GB RAM கொண்ட மாடல் 15999 ரூபாய் விலைக்கும் அறிமுகம் செய்யப்பட்டது. 

இன்று, நிறுவனம் தொலைபேசியின் விலையை ரூ.500 உயர்த்தியுள்ளதை அடுத்து இப்போது இந்த தொலைபேசியின் 4GB RAM + 64GB சேமிப்பு பதிப்புக்கு ரூ.14,499 விலையும், 6 GB RAM + 128 GB பதிப்புக்கு ரூ.16,499 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Views: - 833

0

0