வரவிருக்கும் ரெட்மி நோட் 10 டிஸ்ப்ளே, கேமரா பற்றிய முக்கிய விவரங்கள் வெளியானது!

24 February 2021, 1:23 pm
Redmi Note 10 to feature FHD+ AMOLED display, 48MP quad camera
Quick Share

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 தொடரை மார்ச் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அறிமுகத்திற்கு முன்னதாக, ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன்கள் குறித்த தொடர்ச்சியான தகவல் கசிவுகள் மற்றும் அறிக்கைகள் வெளியாகின. இப்போது ரெட்மி நோட் 10 இன் சில்லறை பெட்டியின் படமும் ஸ்மார்ட்போனின் சில விவரங்களும் வெளியாகியுள்ளது.

இந்த போனின் சில்லறை பெட்டி (retail box) டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் ட்விட்டரில் பகிர்ந்த ரெட்மி நோட் 10 இன் இந்திய யூனிட்டில் உள்ளது. படத்தைப் பொறுத்தவரை, ரெட்மி நோட் 10 ஒரு பஞ்ச்-ஹோல் கேமராவுடன் FHD + AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனை AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் தொடரின் முதன்மையான ஸ்மார்ட்போனாக மாற்றுகிறது. ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது. வெளியான படத்தில், ரெட்மி நோட் 10 பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

ரெட்மி நோட் 10 குவால்காம் ஸ்னாப்டிராகன் 768 செயலி மூலம் இயக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது, இது 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 ஐத் தவிர, சியோமி ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 புரோ மேக்ஸ் ஆகியவற்றையும் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ குவால்காம் ஸ்னாப்டிராகன் 732G செயலி மற்றும் 64 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்புடன் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புடன் கிடைக்கும்.

ரெட்மி நோட் 10 புரோ மேக்ஸ் 5ஜி உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768G செயலியில் இயங்குவதாக வதந்தி பரவியுள்ளது. இது 120 Hz புதுப்பிப்பு வீதத்துடன் IPS டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். ஸ்மார்ட்போனின் குவாட்-கேமரா அமைப்பில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் இடம்பெறும். ரெட்மி நோட் 10 புரோ மேக்ஸ் 5,050 எம்ஏஎச் பேட்டரியையும் பேக் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

Views: - 8

0

0