இதென்ன பெட்ரோல் விலையவிட மோசமா இருக்கு! ரெட்மி நோட் 10-ன் விலை மீண்டும் உயர்வு | புதிய விலை விவரங்கள் இங்கே
Author: Hemalatha Ramkumar27 August 2021, 5:19 pm
சியோமி இந்த ஆண்டு மார்ச் மாதம் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதில் இருந்து நான்காவது முறையாக இந்த ஸ்மார்ட்போனின் விலையை உயர்த்தியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விலை இப்போது மேலும் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வை அடுத்து, இப்போது 4GB/64GB அடிப்படை மாடலுக்கான விலை ரூ.13,999 முதல் ஆரம்பமாகிறது. இந்த அடிப்படை மாடல் ரூ.11,999 விலையில் அறிமுகம் செய்யபட்டது என்பது நினைவுகூரத்தக்கது.
6GB/128GB மாடலின் விலையில் மாற்றம் எதுவும் இல்லை.
ரெட்மி நோட் 10 விவரக்குறிப்புகள்
ரெட்மி நோட் 10 ஒரு பஞ்ச்-ஹோல் கட்-அவுட், தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்கான IP53 மதிப்பீடு மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், குவாட் கேமரா யூனிட் உள்ளது.
ஸ்மார்ட்போன் 6.43-இன்ச் முழு-HD+ (1080×2400 பிக்சல்கள்) சூப்பர் AMOLED திரையை 20:9 திரை விகிதத்துடன் மற்றும் 1,100-nits உச்ச பிரகாசத்துடன் கொண்டுள்ளது.
இது அக்வா கிரீன், ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஷேடோ பிளாக் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி நோட் 10 ஒரு 48 MP (f/1.8) முதன்மை சென்சார், 8 MP (f/2.2) அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 MP (f/2.4) மேக்ரோ ஸ்னாப்பர் மற்றும் 2 MP (f/2.4) ஆழம் சென்சார் கேமரா ஆகியவற்றுடன் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு, 13MP (f/2.5) முன்பக்க கேமரா உள்ளது.
ரெட்மி நோட் 10 ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 678 ப்ராசஸரில் இருந்து 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 12.5 இல் இயங்குகிறது மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
இணைப்பைப் பொறுத்தவரை, இந்த சாதனம் டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, GPS, ஹெட்போன் ஜாக் மற்றும் டைப்-c போர்ட் ஆகியவற்றுக்கான ஆதரவை வழங்குகிறது.
விலை திருத்தத்தைத் தொடர்ந்து, ரெட்மி நோட் 10 இப்போது 4GB/64GB மாடலுக்கு ரூ.13,999 விலையிலும் மற்றும் 6GB/128GB மாடலுக்கு ரூ.15,499 விலையிலும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் mi.com மற்றும் அமேசான் இந்தியா வழியாக விற்பனை செய்யப்படுகிறது.
0
0