பட்ஜெட் விலையில் அறிமுகமானது ரெட்மி நோட் 10T 5ஜி | பயனர்களுக்கு தேவையான என்னென்ன அம்சமெல்லாம் இதிலிருக்கு?

20 July 2021, 1:52 pm
Redmi Note 10T 5G with 90Hz display, Dimensity 700 launched in India
Quick Share

சியோமி நிறுவனம், இந்தியாவில் நிறுவனத்தின் முதல் இடைப்பட்ட 5ஜி ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 10T 5ஜி போனை  அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் 6.5 இன்ச் FHD+ 90 ஹெர்ட்ஸ் டைனமிக் ஸ்விட்ச் டாட் டிஸ்ப்ளே உள்ளடக்கத்தை தானாக சரிசெய்யும் திறன் கொண்டது (30 ஹெர்ட்ஸ் / 50 ஹெர்ட்ஸ் / 60 ஹெர்ட்ஸ் / 90 ஹெர்ட்ஸ்), 91% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தையும், பஞ்ச்-ஹோலுக்குள் 8 MP முன் கேமராவையும் கொண்டுள்ளது. இது 4 ஜிபி RAM கொண்ட டைமன்சிட்டி 700 SoC உடன் இயக்கப்படுகிறது.

இந்த தொலைபேசியில் 48 MP பின்புற கேமரா மற்றும் 2 MP டெப்த் கேமரா மற்றும் 2 MP மேக்ரோ கேமராக்கள் உள்ளன, ரெட்மி நோட் 10 தொலைபேசிகளைப் போலவே Evol டிசைனில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது மற்றும் 18 W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆத்ரவுடன் 5,000 mAh பேட்டரி உள்ளது.

ரெட்மி நோட் 10T 5ஜி போனின் விவரக்குறிப்புகள்

 • 6.5-இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) முழு HD+ 20:9 LCD திரை, 90 Hz புதுப்பிப்பு வீதம், 500 நிட்ஸ் உச்ச பிரகாசம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.
 • மாலி-G57 MC2 GPU உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 700 7nm செயலி  (Dual 2.2GHz Cortex-A76 + Hexa 2GHz Cortex-A55 CPUs) உள்ளது.
 • 64 ஜிபி (UFS 2.2) ஸ்டோரேஜ் உடன் 4 ஜிபி LPDDR 4X RAM / 128 ஜிபி (UFS 2.2) ஸ்டோரேஜ் உடன் 6 ஜிபி LPDDR 4X RAM, மைக்ரோ SD உடன் 1TB வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் உள்ளது.
 • MIUI 12.5 உடன் ஆன்ட்ராய்டு 11
 • ஹைபிரிட் டூயல் சிம் (நானோ + நானோ / மைக்ரோ SD)
 • பின்புறத்தில், 48 MP கேமரா, LED ஃப்ளாஷ், 2 MP டெப்த் மற்றும் 2 MP மேக்ரோ கேமரா
 • முன்பக்கத்தில் 8 MP செல்ஃபி கேமரா உள்ளது.
 • பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், IR சென்சார்
 • 3.5 மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ
 • பரிமாணங்கள்: 161.81 x 75.34 x 8.92 மிமீ; எடை: 190 கிராம்
 • ஸ்பிளாஸ் புரூஃப் (P2i கோட்டிங்)
 • டூயல் 5G (5G NSA: n1 / n3 / n40 / n77 / n78, 5G SA: n78 பேன்ட்ஸ்), இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5.1, GPS, USB Type-C
 • 18W வேகமான சார்ஜிங் கொண்ட 5000 mAh (வழக்கமான) பேட்டரி

விலை & விற்பனை விவரங்கள்

ரெட்மி நோட் 10T 5 ஜி மெட்டாலிக் ப்ளூ, மிண்ட் கிரீன், குரோமியம் ஒயிட் மற்றும் கிராஃபைட் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும், இதன் விலை 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 4 ஜிபி RAM கொண்ட மாடலுக்கு ரூ.13999 ஆகிவும்  மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 6 ஜிபி RAM கொண்ட மாடலின் விலை ரூ.15999 ஆகவும் நிர்ணயம் செய்யப்படடுள்ளது. இது அமேசான் இந்தியா, mi.com, Mi ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் இருந்து ஜூலை 26 முதல் வாங்க கிடைக்கும்.

எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI உடன் வாங்குபவர்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

Views: - 105

0

0

Leave a Reply