ரெட்மி நோட் 9 சீரிஸ், ரெட்மி 9i, ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன்களின் விலைகள் திடீர் குறைப்பு

3 March 2021, 1:04 pm
Redmi Note 9 Series, Redmi 9i, Redmi 9 Prime Get Temporary Price Cut
Quick Share

ரெட்மி நோட் 10 சீரிஸ் மார்ச் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால், ரெட்மி நோட் 10 தொடரிலிருந்து விலை உட்பட பல கசிவுகள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில், அதன் முந்தைய பதிப்பான ரெட்மி நோட் 9 சீரிஸ் நாட்டில் விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது.

ரெட்மி நோட் 9, ரெட்மி நோட் 9 ப்ரோ, மற்றும் ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் உள்ளிட்ட ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரூ.2,000 விலைக்குறைப்பைப் பெற்றுள்ளன. இவை தவிர, ரெட்மி 9i மற்றும் ரெட்மி 9 பிரைம் போன்களும் கூட தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

ரெட்மி நோட் 9 தொடர் விலை குறைப்பு – விவரங்கள்

அடிப்படையில், ரெட்மி நோட் 9 தொடர் ஸ்மார்ட்போன்களில் ரூ.300 முதல் ரூ.2,000 வரை விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ரெட்மி ஸ்மார்ட்போன்களின் புதிய விலைகளை இப்போது பார்க்கலாம்.

  • ரெட்மி 9i 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.8,299 க்கு பதிலாக ரூ.7,999 ஆகவுள்ளது.
  • ரெட்மி 9 பிரைம் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ. 9,999 க்கு பதிலாக ரூ. 9,499 ஆகிவுள்ளது.
  • ரெட்மி 9 பிரைம் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் முன்பு ரூ.11,999 ஆகவும் இப்போது ரூ.10,999 ஆகவும் உள்ளது.
  • ரெட்மி நோட் 9 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட், ரூ.11,999 ஆக இருந்தது தள்ளுபடிக்கு பிறகு ரூ.10,999 விலைக்கு கிடைக்கிறது.
  • ரெட்மி நோட் 9 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.13,499 ஆக இருந்தது தள்ளுபடிக்குப் பிறகு 12,999 ரூபாய் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • ரெட்மி நோட் 9 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.14,999 ஆக இருந்தது இப்போது ரூ.13,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ரெட்மி நோட் 9 புரோ 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ரூ.13,999 விலைக்கு பதிலாக இப்போது ரூ.12,999 விலையில் கிடைக்கும்.
  • ரெட்மி நோட் 9 புரோ 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.15,999 க்கு பதிலாக தள்ளுபடியுடன் ரூ.13,999 க்கு கிடைக்கும்.
  • ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.16,999 ஆக இருந்தது இப்போது ரூ.14,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.18,499 க்கு பதிலாக ரூ.17,499 விலையில் கிடைக்கும்.

மேற்கூறிய ரெட்மி ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்கள் வழியாக தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இருப்பினும், இது நிரந்தர விலைக் குறைப்பு அல்ல, இந்த குறிப்பிட்ட கால சலுகை மார்ச் 15, 2021 வரை மட்டுமே பொருந்தும்.

Views: - 13

0

0