ரெட்மி நோட் 9 5ஜி தொடருடன் ரெட்மி வாட்ச் அறிமுகமாகிறது! ஆனால் இது!?

23 November 2020, 5:23 pm
Redmi Watch Tipped To Launch Alongside Redmi Note 9 5G Series
Quick Share

ரெட்மி புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களான ரெட்மி நோட் 9 5 ஜி மற்றும் ரெட்மி நோட் 9 புரோ 5ஜி போன்களை வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. வெளியீட்டு நிகழ்வின் அதிகாரப்பூர்வ பட்டியலின்படி பிற ஸ்மார்ட் கேஜெட்டுகளும் வெளியாகும் என்பது தெரியவந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக முன்னோட்டமிடப்பட்ட ரெட்மி வாட்ச், அதனுடன் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

ரெட்மி வாட்ச் வெளியீடு

​​ரெட்மி நிறுவனத்தின் பொது மேலாளர் லு வெய்பிங் சில வாரங்களுக்கு முன்பு ரெட்மி வாட்ச்சின் முன்னோட்டத்தை வெளியிட்டிருந்தார். நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் 5ஜி ஆதரவுடனான ஸ்மார்ட்போன்களுடன் நவம்பர் 26 அன்று சீனாவில் வெளியாகும். 

மேலும், வரவிருக்கும் நிகழ்வின் அதிகாரப்பூர்வ பட்டியலின் ஸ்கிரீன் ஷாட்டை வைத்துப் பார்க்கையில் ஓரிரு ஸ்மார்ட் கேஜெட்களும் வெளியாகும் என்பதை வெளிப்படுத்துகிறது. இது முதல் ரெட்மி வாட்ச் ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி வாட்ச்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ரெட்மி வாட்ச் சான்றிதழ் மற்றும் பட்டியலிடும் தளங்களில் இரண்டு முறை தோன்றியுள்ளது. REDMIWT01 என்ற மாதிரி எண்ணைக் கொண்ட ரெட்மி வாட்ச் MIIT சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது. REDMIWT02 மாதிரி எண்ணைக் கொண்ட மற்றொரு ஸ்மார்ட்வாட்சும் UL (Demko) சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது. மாடல் எண்ணில் உள்ள நெருங்கிய ஒற்றுமைகளின்படி பார்க்கையில், ரெட்மி வாட்ச் உலகளாவிய சந்தையில் சியோமி Mi வாட்ச் லைட்டாக அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கிறது.

Mi வாட்ச் லைட்டின் விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்வாட்ச் 1.4 அங்குல சதுர வடிவ வண்ணக் டிஸ்பிளேவை ஆட்டோ பிரைட்னஸ் அம்சத்துடன் கொண்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் FCC சான்றிதழையும் பெற்றது, இது 50ATM நீர் எதிர்ப்பு மற்றும் 24 மணிநேர இதய துடிப்பு கண்காணிப்பை ஆதரிக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. 5W சார்ஜிங் ஆதரவுடன் 230 mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்மார்ட்வாட்ச் ஆக, Mi வாட்ச் லைட் அல்லது ரெட்மி வாட்ச் பல உடற்பயிற்சி முறைகள் மற்றும் விளையாட்டு டிராக்கர்களை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு உள்ளமைக்கப்பட்ட ஜி.பி.எஸ் மற்றும் புளூடூத் 5.1 இணைப்புடன் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Views: - 0

0

0