வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் பாஸ்போர்ட் குறைதீர்ப்பு வசதி | வெளியானது புதிய அறிவிப்பு

Author: Dhivagar
7 September 2021, 10:30 am
Redressal of public grievances on passport related matters Virtual interaction on whatsapp video call
Quick Share

இந்தியாவில், உடனடி மெசேஜிங் சேவை வழங்கும் வாட்ஸ்அப், தனக்கு நிகர் இல்லை என்று  மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும், வாட்ஸ்அப் வீடியோவாக நம் கைகளுக்கு வந்துச் சேருவது முதல், உடனடி மெசேஜிங், வீடியோ அழைப்பு வசதி, வாய்ஸ் மெசேஜ் வசதி, கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது என அனைத்து தேவைக்கும் இது மிகவும் முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத தகவல் தொடர்பு தலமாக மாறியுள்ளது என்று சொன்னாலும் மிகையில்லை. அப்படிப்பட்ட இந்த வாட்ஸ்அப்பில் புதியதாக வாட்ஸ்அப் குறைதீர்ப்பு சேவை துவங்கப்பட்டுள்ளது. 

பாஸ்போர்ட் தொடர்பான குறைகளைத் தீர்ப்பதற்காக, செப்டம்பர் 7-ஆம் தேதி முதல், செவ்வாய்க்கிழமை தோறும் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர், பிராந்திய பாஸ்போர்ட் அலுவலர் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தின் பிற உயரதிகாரிகளுடன், மெய்நிகர் முறையில் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பில் உரையாடி தமது குறைகளை தெரிவிக்கலாம். பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் +917305330666 என்ற இந்த வாட்ஸ்-அப் எண்ணை தங்கள் போனில் சேமித்து இதற்காகப் பயன்படுத்தலாம்.

டெலி கான்ஃபரன்ஸ், மின்னஞ்சல், ஸ்கைப் மெய்நிகர் விசாரணை, டுவிட்டர் ஆகியவற்றின் வாயிலாக பாஸ்போர்ட் தொடர்பான விண்ணப்பதாரரின் குறைகளை, சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் பெற்று, அவற்றை தீர்த்து வருகிறது. இப்போது அவற்றுடன் கூடுதலாக, வாஸ்ட்-அப் வீடியோ அழைப்பு வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல், சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கும் பாஸ்போர்ட் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருந்தால், வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வாயிலாக உங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

Views: - 330

0

0