ஆஃப்லைன் வணிகத்தில் அமேசான் உடன் கூட்டணி! சில்லறை வணிகத்தின் ஆளுமையாகிறதா ரிலையன்ஸ்?

11 September 2020, 5:09 pm
Reliance in Talks with Amazon to Sell 40% Stake in Offline Business
Quick Share

முகேஷ் அம்பானி தலைமையிலான தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், பேஸ்புக், குவால்காம், கூகிள் போன்ற மிகப்பெரிய உலகளாவிய ஜாம்பவான்களிடம் இருந்து அற்புதமான முதலீடுகளைப் பெற்றுள்ளது. இப்போது, ​​ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சில்லறை பிரிவில் சுமார் 20 பில்லியன் டாலர் பங்குகளை அமேசானுக்கு விற்க பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக வியாழக்கிழமை அன்று BloombergQuint அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வணிகத்தின் ஆளுமையாகும் ரிலையன்ஸ்

20 பில்லியன் டாலர்  மதிப்பு என்பது சில்லறை சந்தையில் சுமார் 40% பங்குகளுக்கானது மட்டுமே ஆகும். இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனை சங்கிலி எவ்வளவு பெரியது என்பதைப் புரியவைக்கிறது. இதில் ஆடைகள் முதல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மளிகை பொருட்கள் வரை அனைத்தும் அடங்கும், ரிலையன்ஸ் சமீபத்தில் தான் பிக் பஜாருக்கு சொந்தமான ஃபியூச்சர் குரூப் என்ற நிறுவனத்தையம் வாங்கியது. இந்த நிறுவனம் தான் சமீபத்தில் 200 பில்லியன் டாலர் மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம் ஆகும்.

மறுபுறம், அமேசான் நிறுவனமும் இந்த பேச்சுவார்த்தையில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளதுடன் ரிலையன்ஸ் சில்லறை விற்பனையில் முதலீடு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளது. அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இரண்டிலும் உள்ள ஊழியர்கள் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி பேச அனுமதிக்கப்படவில்லை என்பது போல் தெரிகிறது, அதாவது பேச்சுவார்த்தைகள் மற்றும் விலைகள் இறுதி செய்யப்படும் வரை இது ஒரு மறைமுக தகவலாகவே இருக்கும்.

சரி, இரு நிறுவனங்களுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் நிகழந்தால் என்ன நிகழும்?

முதலில், இது தொற்றுநோயால் தற்போது இழப்பை சந்தித்து வரும் அனைத்து சிறு வணிகக் குழுக்களுக்கும் தங்கள் சில்லறை வணிகத்தை ஆன்லைன் வணிகமாக மாற்றுவதற்கான கட்டமைப்பாக மாறும். எதிர்காலத்தில், மிகப்பெரிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வணிகத்தில் தங்களையும்  சேர்த்து கொள்வதற்கான கட்டாயமும் சிறு வணிகங்களுக்கு ஏற்படலாம். ரிலையன்ஸ் நிறுவனம் மாபெரும் சில்லறை நிறுவனமாக மாற வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும், உறுதியான மாற்றங்கள் அனைத்தையும் எதிர்வரும்  நாட்களில் நம்மால் பார்க்கமுடியும். அதுவரை கூடுதல் அப்டேட்டுகளுக்கு Updatenews360 உடன் இணைந்திருங்கள்.

Views: - 0

0

0