எதிர்பாராத வகையில் 2020-21 முதல் காலாண்டில் புதிய உச்சம் தொட்ட ரிலையன்ஸ் ஜியோ

1 August 2020, 11:13 am
Jio Platforms Added 99 Lakh New Customers in First Quarter
Quick Share

ரிலையன்ஸ் ஜியோ தனது லாபத்தில் 182.8 சதவீதம் அதிகரித்து 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 2,520 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இந்த காலாண்டில் நிகர லாபம் 891 கோடி ரூபாய் ஆக உள்ளது. இதன் பொருள் 2020-21 முதல் காலாண்டில் நிறுவனம் தனது லாபத்தில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 99 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. இருப்பினும், ஜனவரி முதல் மார்ச் 2020 வரை ஜியோவில் இணைந்த சந்தாதாரர்களை விட இந்த எண்ணிக்கை குறைவுதான். ஆபரேட்டர் சந்தாதாரர்களின் எண்ணிக்கை இப்போது 398.3 மில்லியனாக உள்ளது, அதே நேரத்தில் ஒரு பயனரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருவாய் ரூ.140.3 ஆக உள்ளது. மேலும், வீட்டிலிருந்து மக்கள் வேலை செய்யும் முறை டேட்டா பயன்பாட்டை 30.2 சதவீதம் அதிகரித்து 1,420 கோடி ஜிபி தரவுகளாக அதிகரித்துள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது.

“நாடு முழுவதும் COVID-19 தொடர்பான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இந்த காலாண்டில் வலுவான வயர்லெஸ் மொத்த சேர்த்தல் 15.1 மில்லியனாக உள்ளது” என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. அதனுடன் சேர்த்து, “செயல்பாட்டில் இல்லாத வயர்லெஸ் சந்தாதாரர்களுக்கான மாதாந்திர சர்ன் விகிதம் இந்த காலாண்டில் 0.46 சதவிகிதம் மட்டுமே.” என்றும்  ஜியோ தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 13 முதலீட்டாளர்களிடமிருந்து 152,056 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளது. மேலும் 66.48 பங்குகளை இன்னும் தன்னிடமே கொண்டுள்ளது. 13 முதலீட்டாளர்களில், பேஸ்புக், கூகிள், சில்வர் லேக், ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர், முபடாலா, ஏ.டி.ஐ.ஏ, டி.பி.ஜி, எல் கேட்டர்டன், சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதி, இன்டெல் கேபிடல், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ் மற்றும் குவால்காம் ஆகியவை அடங்கும்.

“எங்கள் வளர்ச்சி மூலோபாயம் அனைத்து 1.3 பில்லியன் இந்தியர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவை டிஜிட்டல் சொசைட்டியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்” என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி கூறினார்.

கத்தார் முதலீட்டு ஆணையம் ஜியோ இயங்குதளங்களில் பங்குகளை வாங்கக்கூடும் என்றும் செய்திகள் வந்துள்ளன. தனது பங்குகளை 13 நிறுவனங்களுக்கு விற்ற பிறகு, ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் வணிகத்தில் தனது பங்குகளை விற்க வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தத்திற்காக நிறுவனம் தோஹாவை தளமாகக் கொண்ட இறையாண்மை செல்வ நிதி கத்தார் முதலீட்டு ஆணையத்துடன் (QIA) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. QIA ஜியோ இயங்குதளங்களில் 11,200 கோடி ரூபாய் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. ஜியோ பிராட்பேண்ட் பயனர்களுக்கு, நிறுவனம் ஆறு திட்டங்களை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது, அவற்றின் விலை ரூ. 699 முதல் துவங்கி இது ரூ.8,499 வரை  செல்கிறது.

Views: - 0

0

0