ரூ.4000 விலை வரம்பிலான ரிலையன்ஸ் ஜியோ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் பெயர் இதுதானா?

Author: Dhivagar
1 October 2020, 6:03 pm
Reliance Jio Android Smartphone Listed on Google Play Console
Quick Share

கடந்த மாதம் ரிலையன்ஸ் ஜியோ கூகிள் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த கட்டண ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை கொண்டுவரப்போவதாக அறிவித்தது. ஜியோ ஏற்கனவே தனது ஜியோபோன் வரிசையில் குறைந்த விலையில் 4 ஜி ஸ்மார்ட்போன்களை வழங்குகிறது. தொலைத் தொடர்பு நிறுவனம் இப்போது மலிவு விலையிலான 4ஜி ஸ்மார்ட்போன்கள் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த ஜியோ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்று ஊகிக்கப்படும் ஒரு ஸ்மார்ட்போன் இப்போது கூகிள் பிளே கன்சோலில் பட்டியலிடப்பட்டுள்ளது.

கூகிள் ப்ளே கன்சோல் பட்டியலின்படி, நிறுவனம் “ஆர்பிக் ஆர்.சி .545 எல்” (Orbic RC545L) என்ற குறியீட்டு பெயருடன்  ஒரு ஸ்மார்ட்போனில் வேலை செய்கிறது. ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் QM215 சிப்செட்டுடன் அட்ரினோ 306 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது HD+ ரெசல்யூஷன் (720 x 1440 பிக்சல்கள்) மற்றும் ஆண்ட்ராய்டு 10 ஐ இயக்குகிறது. இதை முதன்முதலில் பிரபல தகவல் கசிவாளர் முகுல் சர்மா கண்டுபிடித்தார்.

இந்த “ஜியோ ஆர்பிக்” ஸ்மார்ட்போன் சமீபத்தில் அமெரிக்க FCC வலைத்தளத்திலும் காணப்பட்டது, இது மேலும் இரண்டு ஆர்பிக் 5 ஜி தொலைபேசிகளுடன் மற்றும் ஒரு 4 ஜி தொலைபேசி உடன் தோன்றியது. இது ட்விட்டரில் அபிஷேக் யாதவ் அவர்களால் பகிரப்பட்டது, அவர் உண்மையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸைச் சேர்ந்தவர். 

ஆனால் ஜியோ நிச்சயமாக குறைந்த விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வேலை செய்கிறது, இதற்கு சுமார், ரூ.4,000 விட குறைவாகவே செலவாகும் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் ஜியோவிலிருந்து குறைந்த கட்டண திட்டங்களுடன் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் சுமார் 20 கோடி ஸ்மார்ட்போனை அடுத்த இரண்டு ஆண்டுகளில் தயாரிக்க ஜியோ திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கை மேலும் கூறியுள்ளது.

Views: - 93

0

0