இந்தியாவின் கிராமப்புறங்களில் நம்பர்-1 ஆக மாறியது ரிலையன்ஸ் ஜியோ! இத்தனை கோடி பயனர்களா?
26 September 2020, 8:24 pmரிலையன்ஸ் ஜியோ பட்டி தொட்டி எங்கும் சென்றடைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். டிராய் வியாழக்கிழமை வெளியிட்ட எண்ணிக்கையின் படி, ஜூன் மாதத்தில், ரிலையன்ஸ் ஜியோ வோடபோன்-ஐடியாவை முந்தி இந்தியாவின் கிராமப்புறங்களில் முதலிடத்தைப் பிடித்தது. கிராமப்புறங்களில், ஜியோவின் நுகர்வோர் எண்ணிக்கை 16.63 மில்லியனை எட்டியுள்ளது.
ஜூன் மாதத்தில், ரிலையன்ஸ் ஜியோ 24 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கிராமப்புறங்களில் பெற்றுள்ளது. வோடபோன்-ஐடியா சுமார் 24 லட்சம் பயனர்களையும் மற்றும் ஏர்டெல் 20 லட்சத்து 68 ஆயிரம் கிராமப்புற வாடிக்கையாளர்களையும் இழந்தன.
ஜூன் மாத இறுதியில், கிராமப்புற இந்தியாவில் 16 கோடியே 60 லட்சம் வாடிக்கையாளர்கள் வோடா-ஐடியாவுடன் இணைப்பில் இருந்தனர் மற்றும் ஏர்டெல்லில் சுமார் 15 கோடி 10 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைப்பில் இருந்தனர். ஜூன் இறுதியில், 39 கோடியே 72 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர்க் உடன் இணைப்பில் இருந்தனர்
ரிலையன்ஸ் ஜியோ மே மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் சுமார் 4.5 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்தது. இந்த காலகட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே புதிய பயனர்களைச் சேர்க்க முடிந்தது, மற்ற நிறுவனங்கள் அதிக அளவு வாடிக்கையாளர்களை இழந்தன. வோடா ஐடியா ஜூன் மாதத்தில் அதிக 48.21 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்தது.
17.44 லட்சம் பயனர்களை இழந்த பின்னர், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏர்டெல் மூன்றாம் இடத்தில் இருந்தது. அதே காலகட்டத்தில், ஜூன் மாதத்தில், 11 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் ஏர்டெல்லின் வலையமைப்பை விட்டு வெளியேறினர். ரிலையன்ஸ் ஜியோவுக்குப் பிறகு, ஏர்டெல் 31.66 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், வோடா-ஐடியா மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பொறுத்தவரை 30.51 கோடி வாடிக்கையாளர்களுடன் மூன்றாவது இடத்திலும் இருந்தது.