ஜியோ கிரிக்கெட் ஆப் அறிமுகம் | இதனால் பயனர்களுக்கு என்னங்க பலன்?

24 October 2020, 8:42 am
Reliance Jio Launches JioCricket Application
Quick Share

KaiOS இயங்குதளத்தில் இயக்கும் ஜியோ போன்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ கிரிக்கெட் செயலியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜியோபோன் பயனர்கள் அதன் 4ஜி அம்ச தொலைபேசிகளில் நேரடி போட்டி ஸ்கோர்களைப் பார்க்க முடியும் மற்றும் பயனர்கள் அனைத்து புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் வீடியோக்களைப் பார்க்கவும் உதவியாக இருக்கும்.

ஜியோ கிரிக்கெட் செயலி ஜியோபோனில் குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு, பங்களா, மற்றும் ஆங்கிலம் போன்ற ஒன்பது மொழிகளில் கிடைக்கிறது. இந்தியன் பிரீமியர் லீக் 2020 சீசன் சமயத்தில் இந்த புதிய வளர்ச்சி வந்துள்ளது. 

சரி, இப்போது இந்த செயலியைப் பதிவிறக்குவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

  • நீங்கள் KaiOS ஆப் ஸ்டோரைப் பார்வையிட வேண்டும்.
  • பின்னர், கீபேட் அல்லது குரல் கட்டளை வழியாக ஜியோ கிரிக்கெட் செயலியைத் தேடுங்கள்.
  • அதன் பிறகு, நீங்கள் JioCricket செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும் அல்லது பதிவிறக்க https://t.jio/jp-jcpa என்பதைக் கிளிக் செய்யவும்.

ரிலையன்ஸ் ஜியோ ப்ளே-அலாங் அம்சம்

பிளே-அலாங் அம்சம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வருகிறது. புதிய அம்சம் அந்த பந்துகளில் வரும் ரன்களையும் விளையாட்டையும் கணிக்க உங்களை அனுமதிக்கிறது. இது ஒரு சிறப்பு வினாடி வினா மற்றும் தினசரி பரிசுகள் என்று ஒரு அம்சத்தையும் கொண்டுள்ளது. அனைத்து பயனர்களும் எளிய சவால்கள் மூலம் பரிசு போட்டிகளில் பங்கேற்கலாம் மற்றும் ஒவ்வொரு நாளும் ரூ.10,000 வெல்வதற்கான வாய்ப்பையும் பெறலாம். மேலும், அனைத்து பயனர்களும் ரீசார்ஜ் தொகுப்புகளின் ஓராண்டு சந்தாவையும் வெல்ல முடியும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.50,000 வரை வெல்வதற்கான வாய்ப்பு!

பயனர்கள் ரூ.50 ஆயிரம் வரை பரிசுகளையும் வெல்ல முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, பயனர்கள் வாரந்தோறும் டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கையும் வெல்ல முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. “ஜியோ கிரிக்கெட் பயன்பாட்டில் எளிமையான பயனர் இடைமுகம் உள்ளது, இது புரிந்துகொள்ள எளிதானது மற்றும் அதே நேரத்தில் பயன்படுத்தவும் எளிதானது” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Views: - 18

0

0