அதிக விலையில் புதிய திட்டம் | சத்தமே இல்லாமல் வேலையைக் காட்டும் அம்பானியின் ஜியோ

6 July 2021, 9:49 am
Reliance Jio Offering 1GB Data For Rs. 7.96 With New Plan
Quick Share

இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக இருந்துவரும் ரிலையன்ஸ் ஜியோ பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்ற நிறுவனங்களின் திட்டங்களை விட மலிவு என்பதால் மிகவும் பிரபலமானவையாகவும் இருக்கின்றன. 

ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டாவை சராசரியாக ரூ.5 என்கிற விலையில் வழங்கி வருகிறது. ஆனால் புதிதாக அறிமுகமான திட்டத்தில் 1 ஜிபி டேட்டாவுக்கு ரூ.7.96 கட்டணம் வசூல்லிக்கிறது. சத்தமே இல்லாமல் அதிக விலையில் டேட்டா வழங்குவது பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. 

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.597 திட்டத்தைப் பற்றி தான் சொல்கிறோம். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.597 விலையிலான திட்டம் ஃப்ரீடம் பேக் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தினசரி வரம்பு இல்லாமல் கொடுக்கப்பட்ட டேட்டாவில் எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.  ரூ.597 திட்டம் 75 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு சேவை மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை 90 நாட்களுக்கு வழங்குகிறது.

இதில் JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான அணுகலும் அடங்கும். இந்த திட்டம் நிறுவனத்தின் வலைத்தளம், ஆப் மற்றும் மூன்றாம் தரப்பு தளங்களிலும் கிடைக்கிறது.

நிறுவனம் ரூ.75 ஜிபி டேட்டாவை மட்டுமே ரூ.597 திட்டத்துடன் வழங்குகிறது, அதாவது பயனர்கள் ரூ.7.96 விலையை 1 ஜிபி டேட்டாவுக்குக் கொடுக்க வேண்டி இருக்கிறது. இருப்பினும், இந்த திட்டம் மற்ற திட்டங்களை விட மிகவும் விலை உயர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும், ஏனெனில் தொலைத்தொடர்பு நிறுவனம் தினசரி வரம்புடன் கூடிய மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு ரூ.5 மட்டுமே வசூலிக்கிறது.

இப்படி தினசரி வரம்பு இல்லை என்று சொல்லிவிட்டு அதிக விலையில் டேட்டா வழங்குவது ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏர்டெல், Vi நிறுவனங்களும் இதே போன்ற திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 191

1

0