ஏர்டெல், வோடபோன் கொடுக்குற ரூ.79 திட்டத்துக்கு ஜியோவின் குறைந்த விலை திட்டம் சூப்பர்! | விவரங்கள் இங்கே

Author: Dhivagar
30 July 2021, 10:23 am
Reliance Jio Rs. 75 Plan Better Than Airtel And Vi Packs Of Rs. 79
Quick Share

ஒரு பயனருக்கான சராசரி வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் திட்டப் பட்டியலில் இருந்து ரூ.49 திட்டத்தை அகற்றியுள்ளது. இப்போது, ​​தொலைதொடர்பு நிறுவனம் அதற்கு பதிலாக ரூ.79 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தை, பயனர்களுக்கு 28 நாட்களுக்கு டாக்டைம் மற்றும் டேட்டா சேவைகளுடன் வழங்குகிறது.

இருப்பினும், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா திட்டம் இன்னும் அதே விலை வரம்பில் திட்டங்களை வழங்கி வருகின்றன. எனவே, ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா ப்ரீபெய்ட் பேக்குகளுடன் கிடைக்கும் நன்மைகளுக்கு இடையிலான வித்தியாசத்தையும் எந்த திட்டம் சிறந்தது என்பதையும் பார்க்கலாம். 

ஜியோபோனுக்கான ரூ. 75 திட்டம்

ரூ.75 ஜியோபோன் திட்டம் 50 செய்திகள், வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 MB + 200 MB டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கும் . மொத்தத்தில், பயனர்கள் திட்டத்துடன் 3 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இந்த திட்டம் JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான அணுகலையும் வழங்குகிறது.

இந்த திட்டத்தைத் தவிர, ஜியோபோன் ரூ.100 க்கு கீழ், ரூ.39 மற்றும் ரூ.69 விலையிலான திட்டங்களையும் வழங்குகிறது. ரூ.39 திட்டம் வரம்பற்ற அழைப்பு, 1400MB டேட்டாவை 14 நாட்களுக்கு வழங்குகிறது. இந்தத் திட்டம் JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான அணுகலையும் வழங்குகிறது.

வோடபோன்-ஐடியாவின் ரூ.79 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன்-ஐடியாவின் ரூ.79 திட்டம் சுமார் ரூ.64 டாக்டைம் வழங்குகிறது. மற்றும் 200MB டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது . இந்த பேக் எந்த SMS நன்மைகளையும் வழங்கவில்லை. தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ரூ.100 க்குள் மேலும் நான்கு திட்டங்களை, ரூ.39, ரூ. 59, ரூ. 65, மற்றும் ரூ.95 விலைகளில் வழங்குகிறது. ரூ.39 பேக் 14 நாட்களுக்கு ரூ.30 டாக்டைம் மற்றும் 100 MB டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது.

ரூ.59 திட்டம் 30 உள்ளூர் + தேசிய மற்றும் ரோமிங் நிமிடங்களை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.65 திட்டம் 28 நாட்களுக்கு ரூ.52 டாக்டைம் மற்றும் 100 MB டேட்டா ஆகியவற்றை வழங்கும். பட்டியலில் கடைசி திட்டமாக இருக்கும் ரூ.95 திட்டம், பயனர்களுக்கு ரூ.74 டாக்டைம் மற்றும் 200 MB டேட்டாவை 56 நாட்களுக்கு வழங்குகிறது.

ஏர்டெல்லின் ரூ.79 ப்ரீபெய்ட் திட்டம்

கடைசியாக ஏர்டெல் அறிமுகம் செய்துழல் ரூ.79 திட்டம் ரூ.64 க்கான டாக்டைம் மற்றும் 200 MB டேட்டா ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது. 

அனைத்து திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.75 திட்டம் 3 ஜிபி டேட்டாவையும் மற்றும் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு வசதியையும் வழங்குவதால், இது சிறப்பான ஒரு தேர்வாக இருக்கும்.

Views: - 198

0

0