டிசம்பர் மாதத்திற்குள் 10 கோடி குறைந்த விலை போன்கள்! வேற லெவல் திட்டத்துடன் ரிலையன்ஸ் ஜியோ!
9 September 2020, 4:19 pmகூகிளின் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் கட்டமைக்கப்படவுள்ள 100 மில்லியனுக்கும் அதாவது 10 கோடிக்கும் அதிகமான குறைந்த விலை ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியை அவுட்சோர்ஸ் செய்ய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தொலைத் தொடர்பு பிரிவு முயன்று வருவதாக இந்தியாவின் பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
டேட்டா பேக்குகளுடன் தொகுக்கப்படும் இந்த தொலைபேசிகள் 2020 டிசம்பரில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகலாம் என்று செய்தித்தாள் புதன்கிழமை அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மிகவும் மதிப்பு வாய்ந்த நிறுவனமான ரிலையன்ஸ் ஜூலை மாதம் ஆல்பாபெட்டின் கூகிள் நிறுவனம் தனது டிஜிட்டல் பிரிவில் 4.5 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் என்று அறிவித்திருந்தது.
ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளரான முகேஷ் அம்பானி, கடந்த ஜூலை மாதம், கூகிள் உடனான ஒப்பந்தம் கையெழுத்தான போது ரிலையன்ஸ் வடிவமைக்கும் குறைந்த விலையிலான “4 ஜி அல்லது 5 ஜி” ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு ஆன்ட்ராய்டு OS பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
ரிலையன்ஸ் தனது டிஜிட்டல் தலமான, ஜியோ பிளாட்ஃபார்ம்களில் கிட்டத்தட்ட 33% பங்கை விற்று 1.52 டிரில்லியன் ரூபாய் (20.22 பில்லியன் டாலர்) திரட்டியுள்ளது மற்றும் பேஸ்புக், இன்டெல் மற்றும் குவால்காம் உள்ளிட்ட உலகளாவிய நிதி மற்றும் தொழில்நுட்ப முதலீட்டாளர்களிடமிருந்தும் முதலீட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0