இந்த விஷயத்துல ரிலையன்ஸ் ஜியோ தான் டாப்! அடிச்சிக்கவே முடியல!

14 May 2021, 8:42 pm
Reliance Jio tops in 4G download speed, Vodafone in upload TRAI
Quick Share

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI இன் சமீபத்திய தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் 20.1MBbps தரவு பதிவிறக்க விகிதத்துடன் ரிலையன்ஸ் ஜியோ தான் முதலிடத்தில் உள்ளது. பதிவேற்ற வேகத்தைப் பொறுத்தவரை 6.7 Mbps பதிவேற்ற வேகத்துடன் வோடபோன் மற்ற நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது. 

ஜியோ அதன் நெருங்கிய போட்டியாளரான வோடபோனுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக பதிவிறக்க வேகத்தைக் கொண்டுள்ளது.

வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் தங்கள் மொபைல் வணிகத்தை வோடபோன் ஐடியா லிமிடெட் ஆக இணைத்திருந்தாலும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இரு நிறுவனங்களின் நெட்வொர்க் வேக தரவை தனித்தனியே வெளியிடுகிறது.

மே 11 அன்று வெளியான TRAI யின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, வோடபோன் ஏப்ரல் மாதத்தில் 7 Mbps பதிவிறக்கம் வேகத்தை பதிவு செய்தது. ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை முறையே 5.8 Mbps மற்றும் 5 Mbps வழங்குகின்றன.

பதிவேற்ற வேகத்தின் பிரிவில் வோடபோன் முதலிடத்தில் உள்ளது, இதன் வேகம் 6.7 Mbps ஆக உள்ளது. இதைத் தொடர்ந்து ஐடியா 6.1 Mbps, ஜியோ 4.2 Mbps மற்றும் ஏர்டெல் 3.9 Mbps பதிவேற்ற வேகத்தைக் கொண்டுள்ளது.

Views: - 231

0

0