ஜனவரி மாதத்தில் ரெனால்ட் கார்களில் அசர வைக்கும் தள்ளுபடி சலுகைகள்!

12 January 2021, 6:13 pm
Renault announces discount offers for January 2021
Quick Share

ரெனால்ட் இந்தியா 2021 ஜனவரி மாதத்திற்கான அனைத்து மாடல்களிலும் தள்ளுபடி சலுகைகளை பட்டியலிட்டுள்ளது. இந்த சலுகைகள் ரொக்க தள்ளுபடிகள், கார்ப்பரேட் சலுகைகள், லாயல்டி போனஸ் மற்றும் பரிமாற்ற தள்ளுபடிகள் போன்றவையாக கிடைக்கின்றன. 

ட்ரைபர் மாடல் மிகவும் மலிவு விலையிலான ஏழு இருக்கைகள் கொண்ட நான்கு மீட்டர் காரில் ஒன்றாகும், இது 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. 

வாடிக்கையாளர்கள் AMT வகைகளில் ரூ.20,000 வரை ரொக்க தள்ளுபடியைப் பெறலாம், மேனுவல் டிரிம்களை ரூ.10,000 ரொக்க தள்ளுபடியுடன் பெறலாம். பரிவர்த்தனை நன்மைகளைப் பொறுத்தவரை AMT பதிப்புகளுக்கு ரூ.30,000 மற்றும் மேனுவல் வகைகளுக்கு ரூ.20,000 தள்ளுபடிகள் கிடைக்கும். விவசாயிகள், சர்பஞ்ச் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ரூ.5 ஆயிரம் தனித்துவமான கிராமப்புற சலுகை கிடைக்கிறது. கார்ப்பரேட்டுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஒரு குறிப்பிட்டவர்களுக்கு ரூ.10,000 கார்ப்பரேட் தள்ளுபடி கிடைக்கும்.

க்விட் இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாகும் மற்றும் சமீபத்தில் ஜான்ஸ்கர் ப்ளூ மற்றும் மூன்லைட் சில்வர் வண்ண நிறங்களின் கலவையுடன் வரையறுக்கப்பட்ட ‘நியோடெக் பதிப்பு’ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் AMT மற்றும் ஹேட்ச்பேக்கின் மேனுவல் வகைகளில் முறையே ரூ.20,000 மற்றும் ரூ.15,000 ரொக்க தள்ளுபடியைப் பெறலாம், கூடுதல் பரிமாற்றம் மற்றும் லாயல்டி போனஸ் ஆக முறையே ரூ.15,000 மற்றும் ரூ.10,000 பெறலாம். கார்ப்பரேட் மற்றும் கிராமப்புற சலுகையாக முறையே ரூ.10,000 மற்றும் ரூ.5,000 கிடைக்கும்.

காம்பாக்ட் எஸ்யூவி ஆன டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வடிவத்தில் ஆறு வேக மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புதிய டஸ்டரை கார்ப்பரேட் மற்றும் கிராமப்புற சலுகையுடன் முறையே ரூ.30,000 மற்றும் ரூ.15,000 சலுகையுடன் வாங்கலாம். கூடுதலாக, கூடுதலாக லால்டி போன்ஸ் ஆக ரூ.15,000 மற்றும் பரிமாற்ற சலுகையாக ரூ.30,000 பெற முடியும், இது RXS மற்றும் RXZ வகைகளுக்கு மட்டுமே கிடைக்கும்.

Views: - 8

0

0