நினைத்ததை நடத்தியே முடிப்பவன்! விண்வெளி பயணத்தில் புதிய சகாப்தம் படைத்த ரிச்சர்ட் பிரான்சன் | Richard Branson | Virgin Galactic

12 July 2021, 1:17 pm
Richard Branson’s Virgin Galactic Flight Opens Door to Space Tourism
Quick Share

விண்வெளியின் எல்லைக்குச் சென்று வர வேண்டும் என்ற தனது சிறுவயது ஆசையை தனது 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நிறைவேற்றிக்கொண்டுள்ளார் விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன். தனது சொந்த செலவில் உருவாக்கிய Unity 22 ராக்கெட்  மூலம் 5 பேருடன் விண்வெளிக்குச் சென்றுவிட்டு மீண்டும் வெற்றிகரமாக பூமியை வந்தடைந்து வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார்.

பூமியின் ஈர்ப்பு விசை இல்லாமல், வானம் இருண்டு பூமியே மறையும் விண்வெளிக்குச் சென்று மீண்டும் வெற்றிகரமாக பூமியை வந்தடைந்து விண்வெளி சுற்றுலா பயணத்தில் புதிய சகாப்தத்தையே துவக்கி வைத்துள்ளார். 

பிரிட்டன் நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில், அதாவது இந்திய நேரப்படி இரவு 8 மணி அளவில் நியூமெக்சிகோ நகரில் இருந்து தனது பயணத்தை துவங்கினார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் விண்வெளி செல்ல வேண்டும் என்ற தனது வாழ்நாள் ஆசைக்காக பல ஆண்டுகள் அயராது உழைத்து பல தடைகளை எல்லாம் படிகளாக மாற்றி இந்த புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் ரிச்சர்ட் பிரான்சன்.

யூனிட்டி விண்கலத்தை இரண்டு மிகப்பெரிய விர்ஜின் விமானங்கள் சுமந்து 15 கிமீ உயரத்தை அதாவது 50 ஆயிரம் அடி உயரத்தை எட்டியதும், விமானங்கள் கழன்று கொண்டது. அதன் பிறகு, விண்கலத்தின் மோட்டார் 60 வினாடிகளுக்கு இயங்கி 90 கிமீ உயரத்தை எட்டும். இந்த நிலையில் புவி ஈர்ப்பு விசை இல்லாமல் ராக்கெட் எடையற்று போய் விண்வெளியில் மிதக்கும். அங்கு விண்வெளி எல்லையை அடைந்த பிறகு அங்கிருந்து மீண்டும் இந்திய நேரப்படி இன்று காலை 10:27 மணிக்கு ஸ்பேஸ்போர்ட் அமேரிக்கா விமான நிலையத்தில் தரையிறங்கினர்.

இது விண்வெளி சுற்றுலா பயணத்திற்கான புதிய சகாப்தத்திற்கான துவக்கமாக பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய சாதனை நிகழ்த்தி தனது 71 ஆவது வயதில் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் ரிச்சர்ட் பிரான்சன். இந்த விண்வெளி பயணத்தில் இந்திய வம்சாவளி பெண்ணான சிரிஷா பண்ட்லா அவர்களும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். கல்பனா சாவ்லா அவர்களால் நிறைவேறா கனவு இப்போது நிகழ்ந்துள்ளதால் இந்தியர்களும் மிகுந்து மகிழ்ச்சியில் உள்ளனர். 

Views: - 145

1

0