புதிய மின்சார காரை உருவாக்கும் பணியில் ரஷ்யா! வெளியானது புதிய தகவல்

29 March 2021, 4:21 pm
Russia to produce new electric car this year
Quick Share

ரஷ்யாவின் ஒரு தனியார் கார் தயாரிப்பு நிறுவனமான ஜெட்டா ஒரு மின்சார காரை வடிவமைத்து வருவதாகவும், இந்த ஆண்டு உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் ரஷ்யாவின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் டெனிஸ் மந்துரோவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியாளரான ரஷ்யாவில் வாகனத் தொழில்துறையில் தற்போது வெற்றிகரமான மின்சார கார் திட்டங்கள் எதுவும் இல்லை. மேலும் குறைவான சார்ஜிங் கட்டமைப்புகளின் காரணமாக ஆய்வாளர்கள் எதிர்காலத்திலும் மின்சார வாகனங்களுக்கான குறைவான வாய்ப்புகளையே காண்கின்றனர்.

கடந்த ஆண்டு ரஷ்யாவில் 687 புதிய கார்கள் உட்பட 5,960 மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டன, மேலும் நாட்டில் மின்சார கார்களின் மொத்தக் விநியோகம் 10,000 க்கும் அதிகமானவை என்று ஆட்டோஸ்டாட் பகுப்பாய்வு நிறுவனமும் தெரிவித்துள்ளது.

சோவியத் மற்றும் ரஷ்ய லாடாவை தயாரித்த அவ்டோவாஸின் (AvtoVaz) இல்லமான டோலியாட்டியை (Tolyatti) தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் கார் தயாரிப்பாளரான ஜெட்டா, நகர்ப்புற கார் மற்றும் வணிக சரக்கு வாகனம் உள்ளிட்ட தொடர்ச்சியான மின்சார வாகனங்களை வடிவமைத்து வருவதாக நிறுவனத்தின் வலைத்தளமும் தகவல் அளித்துள்ளது.

இது குறித்த கூடுதல் அறிவிப்புகள் சீக்கிரமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Views: - 0

0

0