கேலக்ஸி M02 உடன் வைஃபை சான்றிதழ் பெற்றது மேலுமொரு சாம்சங் போன்! விரைவில் வெளியாக வாய்ப்பு

13 November 2020, 3:41 pm
Samsung Galaxy A02 Gets Wi-Fi Certification Along With Galaxy M02
Quick Share

சாம்சங் கேலக்ஸி A மற்றும் M தொடர்கள் மலிவு விலையில் அதன் சிறப்பான பல அம்சங்களுடன் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் கேலக்ஸி A02 மற்றும் கேலக்ஸி M02 ஆகிய இரண்டு தொடர்களையும் மேலும் விரிவுபடுத்துகிறது. இரு தொலைபேசிகளும் சமீபத்தில் வைஃபை சான்றிதழ் பெற்றதாக கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி A02 மற்றும் கேலக்ஸி M02 ஆகியவை வைஃபை அலையன்ஸ் சான்றிதழ் தளத்தில் முறையே SM-A025F மற்றும் SM-M025F மாதிரி எண்களுடன் காணப்பட்டன. Sammobile தகவலின்படி, வரவிருக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இப்போது ஒற்றை-பேன்ட் வைஃபை மற்றும் வைஃபை டைரக்டை ஆதரிக்கின்றன என்பதைத் தவிர பல விவரங்களை வெளிப்படுத்தவில்லை.

இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 10 ஐ இயக்கும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் மற்றும் இடைப்பட்ட பிரிவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே சில அடிப்படை விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி A02, கேலக்ஸி M02: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி A02 மற்றும் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போன்கள்  வதந்திகள் இப்போது ஆன்லைனில் வெளியான வண்ணம் உள்ளன. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இதே போன்ற பல அம்சங்கள் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒன்று, கேலக்ஸி A02 மற்றும் கேலக்ஸி M02 ஆகிய இரண்டும் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இருக்கும் என்றும் ஸ்னாப்டிராகன் 450 சிப்பிலிருந்து ஆற்றலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் பெரும்பாலும் மைக்ரோ SD கார்டு வழியாக சேமிப்பிடத்தை விரிவாக்கலாம்.

பிற விவரங்களில், இவை HD+ தெளிவுத்திறனுடன் 5.71 அங்குல இன்ஃபினிட்டி-V டிஸ்பிளே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளே அளவு மாடல்களைப் பொறுத்து மாறுபடலாம். இப்போதைக்கு, வரவிருக்கும் சாதனங்களைப் பற்றி வேறு எதுவும் தெரியவில்லை. 

தொலைபேசிகளில் 3,500 mAh பேட்டரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வைஃபை சான்றிதழ் மூலம், தொலைபேசியில் புளூடூத் 4.2 மற்றும் LTE இணைப்பு விருப்பங்களும் இருக்கும்.

இப்போதைக்கு, தொலைபேசிகள் எப்போது வெளியாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இது பல சான்றிதழ்களைப் பெற்றுள்ளதால் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

Views: - 31

0

0