5,000 mAh பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போன் அறிமுகம்! ஆனா… இதை வாங்கலாமா?

Author: Hemalatha Ramkumar
19 August 2021, 9:09 am
Samsung Galaxy A03s With 5,000mAh Battery, Triple Cameras Launched
Quick Share

சாம்சங் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் ஆகியுள்ளது. இந்த கைபேசி மீடியாடெக் ஹீலியோ P35 சிப், 5,000 mAh பேட்டரி மற்றும் 13 MP டிரிபிள் கேமரா அமைப்பு போன்ற அம்சங்களுடன் பட்ஜெட்டை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ரெட்மி நோட் 10, ரியல்மீ 8 மற்றும் போகோ M3 போன்ற சாதனங்களுடன் ஒப்பிடுகையில் சாம்சங் மேலும் சிறந்த அம்சங்களை வழங்கியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது. முழு விவரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம். 

சாம்சங் கேலக்ஸி A03s அம்சங்கள்

  • ஆண்ட்ராய்டு 11 இல் One UI 3.1 கோருடன் இயங்குகிறது, ஸ்மார்ட்போன் அதன் 5,000 mAh பேட்டரியிலிருந்து ஆற்றல் பெறுகிறது. இருப்பினும், இது வேகமாக சார்ஜ் செய்யும் அம்சம் இல்லை. 
  • சாம்சங் கேலக்ஸி A03s 6.5 இன்ச் HD+ (720 x 1,600 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி V TFT திரையை 20: 9 விகிதத்தில் கொண்டுள்ளது.
  • மீடியாடெக் ஹீலியோ P35 SoC 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி வரை ஆன் -போர்ட் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் மைக்ரோ SD கார்டு வழியாக 1 TB வரை விரிவாக்கத்திற்கான வசதியையும் வழங்கும். 
  • கேலக்ஸி A03s இல் உள்ள 13MP பிரதான சென்சார், 2MP ஆழ சென்சார் மற்றும் 2MP மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றை கொண்டுள்ளது. 
  • முன் பக்கத்தில், 5 MP செல்ஃபி கேமரா V வடிவ வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஃபோன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் 4G LTE, Wi-Fi, GPS, ப்ளூடூத் v5.0, 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் USB டைப்-C போர்ட் அம்சங்களைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A03s விலை மற்றும் கிடைக்கும் தன்மை

சாம்சங் கேலக்ஸி A03s போனின் அடிப்படை 3GB RAM + 32GB ROM மாடலுக்கு ரூ.11,499 விலையும் மற்றும் 4 ஜிபி RAM + 64 ஜிபி ROM கொண்ட மாடலுக்கு ரூ.12,499 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது samsung.com, முன்னணி சில்லறை மற்றும் ஆன்லைன் சேனல்கள் வழியாக கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

அறிமுக சலுகைகளின் ஒரு பகுதியாக, ஐசிஐசிஐ வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் இஎம்ஐ பரிவர்த்தனை மூலம் ரூ.1,000 உடனடி கேஷ்பேக் கிடைக்கும். இந்த சலுகை ஆகஸ்ட் 31, 2021 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

இந்த போன் வாங்கலாமா?

இந்த விலைப்பிரிவில் கிடைக்கும்  ரெட்மி நோட் 10, ரியல்மீ 8 மற்றும் போகோ M3 போன்ற ஸ்மார்ட்போன்கள் எல்லாம் பல புதுமையான அம்சங்களை கொண்டிருக்கையில் சாம்சங் மேலும் பல அம்சங்களை வழங்கியிருக்கலாம். எனினும் சாம்சங் உங்களுக்கு பிடித்த பிராண்ட் என்றால் நீங்கள் இதை வாங்கலாம்.

Views: - 443

0

0