ப்ளூடூத் சான்றிதழுடன் சாம்சங் கேலக்ஸி A12…. மிக மிக விரைவில் வெளியீடு!

23 November 2020, 5:21 pm
Samsung Galaxy A12 Gets Bluetooth Certification; Launch Imminent
Quick Share

தென் கொரிய நிறுவனத்திலிருந்து விரைவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் கேலக்ஸி A12 ஒன்றாகும். துல்லியமான வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், புதிய அறிக்கைகள் உடனடி வெளியீட்டைப் பரிந்துரைக்கின்றன. SM-A125F_DSN மாதிரி எண் உடன் சாம்சங் கேலக்ஸி A12 ப்ளூடூத் சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது, மேலும் இதன் மூலம் இது விரைவில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A12 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

புளூடூத் பட்டியல் வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி A12 இன் அம்சங்களை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், அதே மாதிரி எண்ணைக் கொண்ட தொலைபேசி ஜீக்பெஞ்ச் மற்றும் ரஷ்ய சான்றிதழ் வலைத்தளம் உள்ளிட்ட பிற சான்றிதழ் பட்டியல்களில் காணப்பட்டுள்ளது. இந்த பட்டியல்கள் மூலம் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்ற ஊகம் கிடைத்துள்ளது.

ஸ்மார்ட்போனின் சரியான அளவு இன்னும் மர்மமாகவே உள்ளது. சாம்சங் கேலக்ஸி A12 செல்ஃபி கேமராவை அமைப்பதற்காக டிஸ்பிளேவில் ஒரு வாட்டர் டிராப் நாட்ச் பகுதியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டு இருப்பதால் டிஸ்பிளே LCD பேனலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பில் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் கீழே ஒரு யூ.எஸ்.பி டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும்.

3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட மீடியா டெக் ஹீலியோ P35 செயலியில் இருந்து சாம்சங் கேலக்ஸி A12 அதன் ஆற்றலை பெரும் என்று ஜீக்பெஞ்ச் பட்டியல் உறுதிப்படுத்தியுள்ளது. 32 ஜிபி மற்றும் 64 ஜிபி ஆகிய இரண்டு சேமிப்பு மாடல்களில் இந்த தொலைபேசி அறிமுகமாகும். கூடுதலாக, 4 ஜிபி ரேம் மாறுபாடும் இருக்கலாம், ஆனால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மற்ற விவரங்களில் 48 MP முதன்மை கேமரா உடன் குவாட்-கேமரா அமைப்பு இருக்கும். செல்பி கேமரா உள்ளிட்ட பிற கேமரா சென்சார்களின் பிரத்தியேகங்கள் இன்னும் மறைமுகமாகவே உள்ளன. புதிய தொலைபேசி என்றாலும், சாம்சங் கேலக்ஸி A12 ஆண்ட்ராய்டு 10 உடன் இயங்கும். வரவிருக்கும் தொலைபேசி கருப்பு, நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வெளியாகும் என்று மற்றொரு அறிக்கை தெரிவிக்கிறது. விலை நிர்ணயம் தெளிவாக இல்லை என்றாலும், சாம்சங் கேலக்ஸி A12 ரூ. 20,000 விலைப்பிரிவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Views: - 0

0

0