சாம்சங் கேலக்ஸி A12 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீடு: விலை & விவரங்கள்
25 November 2020, 4:00 pmசாம்சங் தனது கேலக்ஸி A-சீரிஸின் கீழ் கேலக்ஸி A12 மற்றும் கேலக்ஸி A02 ஆகிய இரண்டு புதிய கைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி A11 க்கு அடுத்தபடியாக கேலக்ஸி A12 உள்ளது. இரண்டு புதிய கைபேசிகளும் 2021 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும், ஆனால் இந்தியாவில் கிடைப்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
சாம்சங் கேலக்ஸி A12 விலை
சாம்சங் கேலக்ஸி A12 மூன்று ரேம் மற்றும் 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட சேமிப்பக கட்டமைப்புகளில் வருகிறது.
64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு 179 யூரோக்கள் விலையும் (சுமார் ரூ.15,700), 128 ஜிபி மாடலுக்கு 199 யூரோ (சுமார் ரூ.17,500) விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி A12 கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் வருகிறது.
சாம்சங் கேலக்ஸி A12 அம்சங்கள்
கேலக்ஸி A12 6.5 இன்ச் HD+ TFT டிஸ்ப்ளேவை 720 x 1500 தெளிவுத்திறனுடன் கொண்டுள்ளது. டிஸ்ப்ளே 8 MP செல்ஃபி கேமராவை வைக்க ஒரு சிறிய வாட்டர் டிராப் நாட்ச் பகுதியைக் கொண்டிருக்கும். இந்த கைபேசியில் பெயரிடப்படாத ஆக்டா கோர் செயலி 2.3GHz கிளாக் உடன் வருகிறது, இது மீடியா டெக் ஹீலியோ P35 SoC வரும் என்று கூறப்படுகிறது. தொலைபேசியின் உள் சேமிப்பகத்தை மைக்ரோ SD கார்டு வழியாக 1TB வரை மேலும் விரிவாக்க முடியும்.
பின்புறத்தில், 48 MP முதன்மை லென்ஸ், 5 MP அல்ட்ரா-வைட், 2 MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 MP ஆழம் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட குவாட்-கேமரா அமைப்பு உள்ளது. மேலும், கைபேசியில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000 mAh பேட்டரி உள்ளது. கடைசியாக. இது வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் ஒரு பக்க நிலை கைரேகை ஸ்கேனரை ஆகியவற்றை ஆதரிக்கிறது.
0
0