எக்ஸினோஸ் 850 சிப்செட், 48 MP குவாட் கேமராக்கள் உடன் Samsung Galaxy A12 இந்தியாவில் அறிமுகம் | விலை & விவரங்கள்

Author: Hemalatha Ramkumar
13 August 2021, 12:29 pm
Samsung Galaxy A12 with Exynos 850, 48MP quad cameras launched in India
Quick Share

சாம்சங் நிறுவனம் தனது புதிய Samsung Galaxy A12 ஸ்மார்ட்போனை இப்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. எக்ஸினோஸ் 850 சிப்செட் உடன் இயங்கும் இந்த சாம்சங் போன் இந்த வார தொடக்கத்தில் ரஷ்யாவில் சாம்சங் கேலக்ஸி A12 நாச்சோ என்ற பெயரில் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது.

அசல் சாம்சங் கேலக்ஸி A12 இந்த ஆண்டு பிப்ரவரியில் மீடியா டெக் ஹீலியோ P35 SoC உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.13,999 ஆகவும் மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி மாடலின் ரூ.14,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சாதனம் எக்ஸினோஸ் 850 சிப்செட், குவாட் கேமரா அமைப்பு, ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான One UI 3.1 மற்றும் 5000 mAh பேட்டரி ஆகியவற்றுடன் வருகிறது.

கைபேசியின் விவரக்குறிப்புகள், விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி A12 இந்திய விலை

4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு சாம்சங் கேலக்ஸி A12 விலை 13,999 ரூபாய் ஆகவும், 

6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.16,499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த தொலைபேசி கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. இது சாம்சங் இந்தியன் இணையதளத்தில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

விவரக்குறிப்புகள்

  • இந்த ஸ்மார்ட்போன் 6.52-இன்ச் HD+ டிஸ்ப்ளே 720 × 1600 பிக்சல்கள் ரெசல்யூஷன்  மற்றும் 60 Hz refresh rate கொண்டுள்ளது. மேலும், டிஸ்ப்ளே இன்ஃபினிட்டி-V நாட்ச் டிசைனுடன் முன் பக்க கேமராவைக் கொண்டுள்ளது.
  • புதிய சாம்சங் கேலக்ஸி A12 போனில் மீடியாடெக் ஹீலியோ P35 சிப்பிற்கு பதிலாக ஆக்டா கோர் எக்ஸினோஸ் 850 சிப்செட் கொண்டுள்ளது.
  • 6 ஜிபி வரை RAM மற்றும் 128 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. சேமிப்பு 1TB வரை மைக்ரோ SD கார்டு வழியாக விரிவாக்கத்திற்கான வசதியையும் கொண்டுள்ளது.
  • புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.
  • இது 48 MP சாம்சங் ISOCELL GM2 முதன்மை சென்சார், 5 MP அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 MP மேக்ரோ மற்றும் பின்புறத்தில் 2 MP டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • செல்ஃபிக்களுக்கு, ஸ்மார்ட்போனில் 8MP முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது.
  • மென்பொருளைப் பொறுத்தவரை, கைபேசி Android 11 அடிப்படையிலான One UI 3.1 இல் இயங்குகிறது. 15W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியும் உள்ளது.
  • பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இதில் உள்ளது. தொலைபேசியிலும் முக அங்கீகார அம்சமும் உள்ளது.
  • தொலைபேசி முன்பக்கத்தில் இரட்டை சிம், 4 ஜி, டூயல்-பேன்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, GPS, A-GPS, Beidou, GLONASS ஆகியவற்றை ஆதரிக்கிறது.
  • கூடுதலாக, தொலைபேசியில் யூ.எஸ்.பி டைப்-c போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவை உள்ளது. கடைசியாக, தொலைபேசி 164 × 75.8 × 8.9 மிமீ அளவுகளையும் மற்றும் 205 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

Views: - 716

0

0