மீடியா டெக் டைமன்சிட்டி 700, 4 ஜிபி RAM உடன் ரொம்ப சீக்கிரமே ஒரு 5ஜி போன் வரப்போகுது!

14 May 2021, 8:02 pm
In addition to Galaxy A22 5G, Samsung is also reportedly working on Galaxy A22s 5G but both are expected to be the same phone.
Quick Share

சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகவிருப்பதாக பல முறை தகவல்கள் வெளியானது. அதையடுத்து, சாம்சங் கேலக்ஸி A22s ஸ்மார்ட்போனை விரைவில் பல பிராந்தியங்களில் அறிமுகப்படுத்தும் என்று ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது. கேலக்ஸி A22s 5ஜி கூகிள் பிளே கன்சோலில் தோன்றியதை அடுத்து தொலைபேசியின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளது. 

கூகிள் பிளே கன்சோல் பட்டியலின் படி, கேலக்ஸி A22s 5ஜி SM-A226B என்ற மாதிரி எண் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் MT633 செயலி உடன் இயங்கும், இது டைமன்சிட்டி 700 செயலி தான்.

இது மாலி G57 GPU மற்றும் 4 ஜிபி RAM உடன் பொருத்தப்பட்டிருக்கும். கேலக்ஸி A22s ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்கும். தொலைபேசியில் முழு HD+ டிஸ்ப்ளே இடம்பெறும் என்பதும் தெரியவந்துள்ளது. பட்டியலில் காட்டப்பட்டுள்ள படத்தின் அடிப்படையில், கேலக்ஸி A22s 5ஜி இன்ஃபினிட்டி-V கட்அவுட்டுடன் ஒரு குறிப்பிடத்தக்க டிஸ்பிளே அமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி A22s 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் இன்ஃபினிட்டி-V டிஸ்ப்ளே உடன் 6 ஜிபி ரேம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இரண்டு RAM விருப்பங்களுடன் தொலைபேசி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி A22 5ஜி போனின் விலை சுமார் ரூ.13,000 ஆக இருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதே  போன்ற  விலையுடன் தான் கேலக்ஸி A22s 5ஜி மாடலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

கேலக்ஸி F22 என்ற புதிய கேலக்ஸி F சீரிஸ் தொலைபேசியில் சாம்சங் செயல்படுவதாகவும் மற்றொரு அறிக்கை தெரிவிக்கிறது. இந்த தொலைபேசி கேலக்ஸி A22 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் சாம்சங் அதே தொலைபேசியை மற்ற பிராந்தியங்களில் சில மாற்றங்களுடன் வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது.

Views: - 174

0

0