Samsung Galaxy | சாம்சங் கேலக்ஸி A52 மற்றும் கேலக்ஸி A72 போன்களின் விலை விவரங்கள் கசிந்தன

27 January 2021, 1:13 pm
Samsung Galaxy A52 and Galaxy A72 pricing details leaked
Quick Share

சாம்சங் தற்போது கேலக்ஸி A52 மற்றும் கேலக்ஸி A72 ஆகிய போன்களில் பணியாற்றி வருகிறது, அவை விரைவில் அறிமுகமாக உள்ளன. இப்போது அவை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, ஐரோப்பிய சந்தைக்கான கேலக்ஸி A52 மற்றும் A72 ஆகியவற்றின் விலை விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

கேலக்ஸி கிளப் அறிக்கை வரவிருக்கும் A-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலையைக் கண்டறிந்துள்ளது. இரண்டு தொலைபேசிகளும் டெனிம் ப்ளூ, ஐசி வைட் மற்றும் கிராஃபைட் பிளாக் வண்ணங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி A52 எதிர்பார்க்கப்படும் விலை

வெளியான கசிவுகளின் படி, சாம்சங் கேலக்ஸி A52 4ஜி போனின் 

  • 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் EUR 369 (தோராயமாக ரூ.32,700) மற்றும் 
  • 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு EUR 429 (தோராயமாக ரூ.38,000) விலை நிர்ணயிக்கப்படும்.

சாம்சங் கேலக்ஸி A52 இன் 5ஜி மாறுபாட்டின் விலை 

  • 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பகத்திற்கு EUR 459 (தோராயமாக ரூ.40,700) விலையும், 
  • 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு ஸ்டோரேஜ் மாடல் EUR 509 (தோராயமாக ரூ.45,100) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A72 எதிர்பார்க்கப்படும் விலை

ஐரோப்பாவில், சாம்சங் கேலக்ஸி A72 4ஜி ஸ்மார்ட்போனின் 

  • 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு EUR 449 (தோராயமாக ரூ.39,800) விலையும் மற்றும் 
  • 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரிண்டிற்கு EUR 509  (தோராயமாக ரூ.45,100) விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Views: - 0

0

0