Samsung Galaxy A52s | 120 Hz டிஸ்ப்ளே உடன் சாம்சங் கேலக்ஸி A52s 5ஜி இந்தியாவில் அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

Author: Dhivagar
1 September 2021, 3:04 pm
Samsung Galaxy A52s 5G With 120Hz Display Launched In India
Quick Share

சாம்சங் இந்தியாவில் கேலக்ஸி A52s 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த கைபேசி கேலக்ஸி A52 போன்ற வடிவமைப்பையே கொண்டுள்ளது மற்றும் பன்னிரண்டு 5ஜி பேண்ட் சப்போர்ட், தூசி எதிர்ப்புக்கான IP67 மதிப்பீடு மற்றும் 1 மீட்டர் ஆழம் வரை 30 நிமிடங்கள் வரை நீர் எதிர்ப்பு திறன் போன்ற அம்சங்களுடன் வருகிறது. மற்ற அம்சங்களில் 120 Hz டிஸ்பிளே, குவாட் கேமராக்கள் போன்ற பல அம்சங்களையும் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A52s 5G அம்சங்கள்

ஆண்ட்ராய்டு 11 OS ஐ UI 3 உடன் இயக்குகிறது, கேலக்ஸி A52s 5G 6.5 இன்ச் முழு HD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-O டிஸ்ப்ளே 120 Hz refresh rate போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G SoC உடன் 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் மைக்ரோ SD கார்டு பயன்படுத்தி 1TB வரை ஸ்டோரேஜை விரிவாக்க முடியும்.

மேலும், சாம்சங் கேலக்ஸி A52s 5G ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 64MP முதன்மை சென்சார் f/1.8 துளை மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டாப்பிலைசேஷன் (OIS) ஆதரவு, 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் ஒரு ஜோடி 5MP மேக்ரோ மற்றும் டெலிஃபோட்டோ சென்சார்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. செல்ஃபி எடுக்க 32 MP முன்பக்க கேமரா உள்ளது.

4,500 mAh பேட்டரி 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் போனை சார்ஜ் செய்கிறது. கேலக்ஸி A52s 5G இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 5G, 4G LTE, Wi-Fi, ப்ளூடூத், GPS/ A-GPS, NFC மற்றும் USB டைப்-C போர்ட் போன்ற அம்சங்களையும் ஆதரிக்கிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்

சாம்சங் கேலக்ஸி A52s 5G போனின் விலை இந்தியாவில் அடிப்படை 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.35,999 ஆகவும், டாப்-ஸ்பெக் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் உடனான மடலுக்கு ரூ.37,499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான், samsung.com மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்து – அமேஸிங் கருப்பு, அமேஸிங் வயலட் மற்றும் அமேஸிங் வெள்ளை ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். அறிமுக சலுகைகளின் ஒரு பகுதியாக, நீங்கள் கேஷ்பேக் பெறலாம். எச்டிஎப்சி வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளில் தள்ளுபடி அல்லது ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறலாம்.

போட்டியிட தரமான போனா?

IP ரேட்டிங், 12 5ஜி பேண்ட் சப்போர்ட் மற்றும் 120 Hz sAMOLED டிஸ்ப்ளே ஆகியவை கேலக்ஸி A52s 5ஜி போனுக்கான முக்கியமான கவனம் ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன. இருப்பினும், இந்த விலை வரம்பில் நீங்கள் முதன்மை SD888 சிப் பெறுவதால் ஸ்மார்ட்போனின் விலை அதிகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Realme GT Master Edition மற்றும் Motorola Edge 20 போன்களுக்கு போட்டியாக இருக்கும்.

Views: - 308

0

0