ஸ்னாப்டிராகன் 778G சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி A52s 5ஜி அதிகாரப்பூர்வ அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

Author: Hemalatha Ramkumar
20 August 2021, 10:41 am
Samsung Galaxy A52s 5G goes official
Quick Share

சாம்சங் தனது A-தொடரில் புதிய ஸ்மார்ட்போன் ஆக சாம்சங் கேலக்ஸி A52s 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. இது £410 (தோராயமாக ரூ.41,900) ஆரம்ப விலையில் மற்றும் கேலக்ஸி A52 5G மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 778G செயலி, 6.5 அங்குல திரை, குவாட் ரியர் கேமராக்கள் மற்றும் 25W வேகமான சார்ஜிங் ஆதரவு ஆகியவற்றை வழங்கும்.

சாம்சங் கேலக்ஸி A52s 5ஜி IP67 மதிப்பிட்டுடனான கட்டமைப்பு, மெலிதான பெசல்கள் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ரீடர் ஆகியவற்றை கொண்டிருக்கும். பின்புறத்தில், இது ஒரு குவாட் கேமரா யூனிட்டைக் கொண்டிருக்கும்.

இந்த கைபேசி 6.5 இன்ச் முழு HD+ (1080×2400 பிக்சல்கள்) சூப்பர் AMOLED திரையுடன் 120 Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கும்.

இது ப்ளேஸிங் கருப்பு, ப்ளேஸிங் வெள்ளை, ப்ளேஸிங் வயலட் மற்றும் ப்ளேஸிங் மின்ட் வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி A52s 5G 64MP (f/1.8) முதன்மை சென்சார், 12MP (f/2.2) அல்ட்ரா-வைட் ஷூட்டர், 5MP (f/2.4) மேக்ரோ லென்ஸ் மற்றும் 5MP (f/2.4) ஆழ கேமரா ஆகியவற்றை கொண்டிருக்கும். முன்பக்கத்தில், இது 32MP (f/2.2) செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி A52s 5ஜி, ஸ்னாப்டிராகன் 778G சிப்செட் உடன் இயக்கப்படும், இதில் 8 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் இடம்பெறும்.

இந்த போன் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது மற்றும் 25W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

இணைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த சாதனம் டூயல்-பேன்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2, GPS, 5ஜி, ஹெட்போன் ஜேக் மற்றும் டைப்-C போர்ட் ஆகியவற்றுக்கான ஆதரவைக் கொண்டிருக்கும்.

இங்கிலாந்தில், கேலக்ஸி A52s 5ஜி அடிப்படை 6 ஜிபி/128 ஜிபி மாடலுக்கு £410 (தோராயமாக ரூ.41,900) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 24 முதல் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கும் மற்றும் செப்டம்பர் 3 முதல் விற்பனைக்கு வரும்.

Views: - 381

0

0