ஸ்னாப்டிராகன் செயலிகளுடன் Samsung Galaxy Book Go 5 ஜி லேப்டாப் அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

4 June 2021, 10:15 am
Samsung Galaxy Book Go, Go 5G, with Snapdragon processors, launched
Quick Share

பட்ஜெட் விலைப்பிரிவில்  புதிய  மடிக்கணினிகளை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்க சந்தையில் சாம்சங் கேலக்ஸி புக் Go நோட்புக் லேப்டாப்பை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 4ஜி மற்றும் 5ஜி வகைகளில் வழங்கப்படுகிறது.

இந்த சாதனத்தின் விலை $349 (தோராயமாக ரூ.25,500) முதல் ஆரம்பமாகிறது மற்றும் ஸ்னாப்டிராகன் கம்ப்யூட் பிளாட்ஃபார்ம், 14 அங்குல முழு HD டிஸ்ப்ளே, 18 மணிநேர பேட்டரி லைஃப் மற்றும் டால்பி அட்மோஸ் ஆடியோ ஆதரவுடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி புக் Go மற்றும் Go 5ஜி பிரீமியம் மற்றும் மெலிதான உடலமைப்புடன் அடர்த்தியான மேல் மற்றும் கீழ் பக்க பெசல், 180 டிகிரி ஹின்ஜ், சில்வர் ஃபினிஷ் மற்றும் டச்பேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அவை 14 அங்குல முழு HD (1920×1080 பிக்சல்கள்) TFT திரையை 16:9 என்ற விகிதத்துடன் கொண்டுள்ளது.

பரிமாணங்களைப் பொறுத்தவரை, மடிக்கணினிகள் 323.9×224.8×14.9 மிமீ அளவுகளையும் மற்றும் 1.38 கிலோ எடையையும் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி புக் Go மற்றும் Go 5ஜி முறையே ஸ்னாப்டிராகன் 7C ஜெனரேஷன்-2 மற்றும் ஸ்னாப்டிராகன் 8 cx ஜெனரேஷன்-2 சிப்செட்களிலிருந்து 8 ஜிபி வரை DDR4 RAM மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் மூலம் ஆற்றலை பெறுகிறது.

இவை விண்டோஸ் 10 Home / pro உடன் boot செய்யப்படுகிறது. வெண்ணிலா மாடலில் 42.3Wh பேட்டரி 25W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் உள்ளது மற்றும் 18 மணிநேர இயக்க நேரத்தை வழங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி புக் Go மற்றும் Go 5ஜி ஆகியவை இரண்டு டைப்-C போர்ட்கள், ஒரு யூ.எஸ்.பி 2.0 போர்ட் மற்றும் ஒரு ஹெட்போன் / மைக் காம்போ ஜாக் உள்ளிட்ட பல I / O போர்ட்களைக் கொண்டுள்ளது. 

வயர்லெஸ் இணைப்பிற்காக, அவை டூயல்-பேன்ட் வைஃபை, புளூடூத் 5.1 மற்றும் 5ஜி/LTE (ஆப்ஷனல்) ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகின்றன.

இந்த இயந்திரங்கள் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்துடன் 720p HD வெப் கேமரா மற்றும் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி புக் கோ லேப்டாப்பின் அடிப்படை WiFi only மாடலுக்கான ஆரம்ப விலை $349 (தோராயமாக ரூ.25,500) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மற்றும் ஜூன் 10 முதல் இது வாங்க கிடைக்கும். 5ஜி மாடலுக்கான விற்பனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Views: - 149

0

0

Leave a Reply